- Advertisement -
Homeபொழுதுபோக்குபகலில், வெளிச்சத்தில் இவருக்கு படம் பண்ணவே தெரியாதா, இருட்டுல தடுமாறிக்கிட்டே தான் படம் பார்க்கணுமா -...

பகலில், வெளிச்சத்தில் இவருக்கு படம் பண்ணவே தெரியாதா, இருட்டுல தடுமாறிக்கிட்டே தான் படம் பார்க்கணுமா – இதுக்கு டைரக்டர் சொல்ற விளக்கம் என்ன தெரியுமா?

- Advertisement -

தியேட்டர் அரங்கிற்குள் சென்றுவிட்டால், இரண்டரை மணி நேரம் இருட்டில் அமர்ந்துதான் படம் பார்க்கிறோம். திரையில் இருக்கிற வெளிச்சம் மட்டுமே எதிரில் பார்வையாளர்களான ரசிகர்கள் மீது பிரதிபலிக்கும். திரையில் வரும் காட்சிகள் பளீரென்று பார்த்து, பார்த்து தான் படங்களை ரசிகர்கள் ரசித்து மகிழ்கின்றனர்.

ஆனால், சில படங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரவிலேயே கதை நடப்பதாக படம் இருந்தால், தியேட்டரிலும் இருட்டு, திரையிலும் இருட்டு என்ற நிலையில், கும்மிருட்டான காட்சிகளை பார்க்க வேண்டிய நிலையில், ரசிகர்கள் அதிருப்தியைடய வேண்டும். இதுதான் நியாயமாகவும் இருக்கும்.

- Advertisement -

ஆனால், இந்த இயக்குநர் படம் என்றாலே, படம் முழுக்க இருட்டு, இருட்டுதான். பகலில் நடப்பது போன்ற காட்சிகள் அவ்வப்போது ஏதேனும் சில இடங்களில் வரலாம். ஆனால், பெரும்பாலும் இரவில் கதை நடப்பது போன்றே இவரது படங்களில் திரைக்கதை இருந்து வருகிறது. படம் முடிந்து வெளியே வரும் வரை ஏதோ அண்டர்கிரவுண்டுக்குள் இருந்த மனநிலையே பலருக்கும் ஏற்படுகிறது.

இன்று பரபரப்பாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான், அந்த இரவு நேர இயக்குநராக இருக்கிறார்.. மணிரத்னம் படங்களில் இருட்டு காட்சிகள் அதிகமாக இருக்கும்.அவருக்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் அதே பாணி தான். அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் வரை இருட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான். இதில், கைதி மட்டும் 61 நாட்கள் இரவில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். அரைமணி நேரம் மட்டும் பகலில் ஷூட் எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், எனது படங்கள், குற்றச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இரவில் இருட்டில்தான் அதிக குற்றங்கள் நடக்கின்றன. இரவில் நடக்கும் சண்டை காட்சிகள்தான், ரசிகர்களுக்கு ஒருவித ஆக்சன் மனநிலையை தரும். இது எனக்கு ஊமை விழிகள், இணைந்த கைகள் படத்தின் தாக்கத்தில் இருந்து வந்தது. அந்த படங்களில், பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டு இருக்கும்.

இந்தி படங்கள், ஆங்கில படங்கள், வெஸ்டர்ன் டைப் படங்கள் என இரவு நேர கதைக்களம் கொண்ட படங்களை அதிகமாக நான் பார்த்ததால், அந்த பாதிப்பாக கூட இருக்கலாம். இப்படி இரவு நேர கதைக்கள காட்சிகளை, ஆடியன்ஸ்க்கு புரிய வைப்பதில், டெக்னிக்கலாக பலத்த சிரமங்கள் இருப்பதும் உண்மைதான். ஆனால், கைதி படம் 61 இரவுகள் எடுக்கப்பட்டது. மாஸ்டர் படமும், பாதிக்கு மேல் இரவில் எடுக்கப்பட்டதுதான். அதுபோல் விக்ரம், மாநகரம் படத்திலும் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளே மிக அதிகம். எனினும் கதையம்சம் புரியும்படி இருந்ததால், இருட்டு காட்சிகளில் படம் இருந்தாலும் ரசிகர்கள் புரிந்துக்கொண்டு வெற்றி பெறச் செய்துவிட்டனர் என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சற்று முன்