- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா... டைரக்டர் கொடுத்த அப்டேட்... எஸ்.கே....

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா… டைரக்டர் கொடுத்த அப்டேட்… எஸ்.கே. ரசிகர்கள் ஆனந்தம்…

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதராசி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ ஆர் முருகதாஸ் இதனை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், விக்ராந்த், வித்யூத் ஜமால் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

தலைநகர் சென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் திரைக்கதை கஜினி போன்று இருக்கும் எனவும், ஆக்சன் காட்சிகள் துப்பாக்கிப் போல இருக்கும் எனவும் அதன் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருந்தார். அதேபோல படத்தின் மையக் கருவும் அண்மையில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

அதாவது வட இந்தியாவைச் சேர்ந்த மாஃபியா கும்பலுக்கும், சிறப்பு படை பிரிவினருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. இதில் ஆக்சன் உடன் சேர்ந்து காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்கான பிரமோஷன் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதராசி திரைப்படத்தை தொடர்ந்து, பராசக்தி திரைப்படத்தில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன். சென்னை காரைக்குடி சிதம்பரம் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்ட இதன் படப்பிடிப்பு நடுவே நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பொள்ளாச்சியில் சூட்டிங் தொடங்கி இருக்கிறார்கள். சுதா கொங்கரா இதனை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, குட் நைட் திரைப்பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் உடன் சிவகார்த்திகேயன் இணைவதாக இருந்தது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் மோகன் லாலுக்கான கால்ஷீட் கிடைக்காததால், அந்தப் பணிகளை தள்ளிப் போட்டு இருக்கிறார்கள்.

இதன் நடுவே வெங்கட் பிரபு திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கும் வெங்கட் பிரபு, இதுவரை யாரும் பார்த்திராத வகையில் சிவகார்த்திகேயனுக்கு மிக வித்தியாசமான கதாபாத்திரம் இருக்கும். ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டன. அது மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அனைத்து விதமான ஆடியன்ஸ்களுக்கும் பிடிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்