- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயம் ரவி திரைப்படத்திற்காக இணைந்த இரண்டு இயக்குனர்கள்... பிக் பாஸ் நட்சத்திரத்திற்கும் படத்தில் வாய்ப்பு உள்ளதாம்......

ஜெயம் ரவி திரைப்படத்திற்காக இணைந்த இரண்டு இயக்குனர்கள்… பிக் பாஸ் நட்சத்திரத்திற்கும் படத்தில் வாய்ப்பு உள்ளதாம்… ஒரே சஸ்பென்சா இருக்கேப்பா…

- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது டாடா திரைப்படம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கவின் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. வழக்கமான கதை தான் என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதத்தில் சபாஷ் போட வைத்தார் இயக்குனர் கணேஷ் பாபு.

 

- Advertisement -

படத்தின் முதல் பாதி ஒரு பரிணாமத்திலும் இரண்டாம் பாதி வேறு ஒரு தளத்திலும் எடுக்கப்பட்டு அப்லாசை அள்ளியது. குறிப்பாக, இந்த திரைப்படத்தில் நடித்த கவின் பலராலும் பாராட்டப்பட்டார்.

 

- Advertisement -

அதற்கு முன்பு அவர் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், டாடா திரைப்படத்தில் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்து இருந்தார். இதன் காரணமாக டாடா திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

 

இதற்குப் பிறகு, கவினுக்கும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. தற்போது பிளடி பக்கர் என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது தீபாவளிக்கு வெளியாகிறது. இதுபோக கிஸ், மாஸ்க் என கவினின் பட வரிசை தொடர்கிறது.

 

இந்த நிலையில் டாடா பட இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக பலரும் எதிர்பார்த்திருந்தனர். இப்படியான சூழலில் தான் அவர் ஜெயம் ரவியுடன் இணையப் போவதாக தகவல் வெளியானது. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஜெயம் ரவியின் 34-வது திரைப்படமாக இது எடுக்கப்படுகிறது.

 

இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதும் பணிக்காக கைகோர்த்து இருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார். இவர் ஏற்கனவே மேயாத மான், ஆடை, குளுகுளு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். லியோ திரைப்படத்திலும் அவர் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டார். தற்போது அவர் கணேஷ் பாபுவுடன் இணைந்திருக்கிறார். இதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பிரதீப் ஆண்டனியும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஏற்கனவே அருவி, வாழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்