- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு ரஜினி சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஏமாந்த பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் -...

சிம்பு ரஜினி சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஏமாந்த பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் – தனது 48வது படத்தை இயக்க வாய்ப்பளித்த சூப்பர் ஹீரோ!

- Advertisement -

நடிகர் ஹரீஷ் கல்யாண் இந்துஜா எம்எஸ் பாஸ்கர் இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி 2023ம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பார்க்கிங். இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்திருந்தார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

ஒரு காம்பவுண்ட் வீட்டுக்குள் யார் காரை நிறுத்திக் கொள்வது என்று 2 வீட்டுக்காரர்களிடம் ஏற்படும் ஈகோவும் சண்டையும் தான் இந்த படத்தின் மையக்கரு. இந்த படத்தில் சிறந்த நடிப்பை தந்த நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2 தேசிய விருதுகள் இந்த படத்துக்கு கிடைத்தன.

- Advertisement -

இந்நிலையில் பார்க்கிங் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 48 படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. பிறகு அந்த படமே டிராப் ஆகி விட்டது. அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173 படத்தை இயக்கவும் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் ரஜினி கதை கேட்டார். ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பு சிபி சக்ரவர்த்திக்கு போய்விட்டது.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணன் கதை சொன்ன நிலையில் அவர் பெண்டிங்கில் போட்டு விட்டார். அதனால் 3 பெரிய ஹீரோக்களிடம் கதை சொல்லியும் ஒர்க் அவுட் ஆகாத நிலையில் இப்போது நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 48வது படத்தை டைரக்ட் செய்யும் ஒரு வாய்ப்பு ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 48வது படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யாவின் 48வது படம் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா கல்லூரி மாணவர் கேரக்டரில் நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சில்லுன்னு ஒரு காதல் வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் கல்லூரி மாணவராக திரையில் சூர்யா வருகிறார்.

- Advertisement -

சற்று முன்