- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த தமிழ் பட இயக்குனர்களை இப்போதும் நான் பின்தொடர்கிறேன் - மலையாள பட இயக்குனர் ஜித்து...

அந்த தமிழ் பட இயக்குனர்களை இப்போதும் நான் பின்தொடர்கிறேன் – மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

மலையாளப் படஇயக்குனர் ஜித்து மாதவன் இப்போது சூர்யா நடித்த சீன் படத்தை இயக்கி உள்ளார். இந்த நிலையில் ஜித்து மாதவன் கூறியதாவது, எனக்கு டைரக்டர் கார்த்திக் சுப்பராஜை ரொம்பவும் பிடிக்கும். அவரின் ஜிகர்தண்டா படம் பைபிள் மாதிரி. அந்த படத்தின் ஞாபகம் வராமல் ஒரு கேங்ஸ்டர் படம் எடுப்பது ரொம்பவும் கடினமானது. பிறகு நலன்குமாரசாமியை ரொம்பவும் பிடிக்கும். அவரை நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து பின் தொடர்கிறேன். அவருடைய குறும்படங்களில் தொட்ட விஷயங்கள் ரொம்பவும் புதியவை. சூது கவ்வும் காதலும் கடந்து போகும் எல்லாம் என் விருப்ப பட்டியலில் எப்போதும் இருக்கின்றன. அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் என்று இயக்குனர் ஜித்து மாதவன் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்