- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர் - திடீர் விசாரணையால்...

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர் – திடீர் விசாரணையால் கதறி அழுத பெண்மணி!

- Advertisement -

தமிழகத்தின் முதலமைச்சராக எம்ஜிஆர் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் இது. ஒருமுறை மதுரைக்கு சுற்றுப் பயணம் சென்ற எம்ஜிஆர் பல்வேறு நலத்திட்ட பணிகளை வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வில் ஈடுபட்டார். அன்று இரவு 9 மணி ஆகி விட்டது. அப்போது அதிகாரிகளை அழைத்த எம்ஜிஆர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்காது அல்லவா என்றும் கேட்டுக்கொண்ட அவர், கோவில் அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டு தன்னுடன் முக்கிய சில அதிகாரிகளை மட்டுமே அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

- Advertisement -

சுவாமி தரிசனம் முடித்து விட்டு தனக்கு விசேஷமான எந்த வரவேற்பும் ஆரவாரமும் வேண்டாம் என்று கூறிய எம்ஜிஆர் கோவில் நிர்வாகம் குறித்தும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். அப்போது கோவிலில் திருவாசகம் திருவெம்பாவை கற்றுத் தரும் பெண்மணியை சந்திக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

கோவிலுக்கு மிக அருகில் அந்த பெண்மணி வீடு இருந்ததால் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் வந்திருக்கிறார். தன்னை பார்க்க அழைத்துள்ளார் என்று தெரிந்தவுடன் அந்த பெண்மணி கதறி கதறி அழத் துவங்கி விட்டார். எம்ஜிஆரிடம் வந்தும் விக்கி விக்கி அழுதிருக்கிறார்.

- Advertisement -

அந்த பெண்மணி சரியாக பணி செய்வதில்லை என்பது குறித்து எம்ஜிஆருக்கு புகார் வந்துள்ளது. அதை விசாரிக்கும் பொருட்டுதான் கோவிலுக்கு விசிட் செய்திருக்கிறார். அந்த பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர், உங்கள் அம்மா சிறப்பாக பணி செய்தார்கள் என்பதால் தான் அவருக்கு பிறகு இந்த பொறுப்பான பணியை உங்களுக்கு தந்துள்ளனர். இப்படி பொறுப்பின்றி நடந்துக்கொள்ளலாமா, என்று கேட்டிருக்கிறார்.

அவரும் இனிமேல் சரியாக நடந்துக்கொள்கிறேன். என்னை நம்புங்கள் என்று அழுதுகொண்டே கூறியிருக்கிறார். நான் அழைத்தவுடன் வந்ததற்கு நன்றி. நீங்கள் போகலாம் என்று அவரை திருப்பி அனுப்பியிருக்கிறார். எம்ஜிஆர் நினைத்திருந்தால் அந்த பெண் மீது புகார் வந்தவுடனே வேலையை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அவரது குடும்ப சூழல் கருதி அவரை மதுரைக்கு சென்ற போது அந்த பெண்ணை நேரில் அழைத்து எச்சரித்து அவரை திருந்தி பணி செய்யும்படி ஒரு வாய்ப்பை தந்திருக்கிறார் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்