தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக திரைக்கதை மன்னராக புகழ்பெற்றவர் கே பாக்யராஜ். அவர் இயக்கிய நடித்த படங்கள் எல்லாமே அற்புதமான படைப்புகளாக உள்ளது. அதிலும் அவர் பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டரில் நடித்த அந்த 7 நாட்கள் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மறைந்த இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, அந்த 7 நாட்கள் படத்தில் ராஜேஷ் நடித்த டாக்டர் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நான்தான். அப்புறம் பாலக்காட்டு மாதவன் கேரக்டர் கிரியேட் செய்த பிறகுதான் அந்த மாதவனாக நான் நடிப்பது என்று முடிவு செய்தேன்.
அதற்கு காரணம், முதலில் அம்பிகாவுக்கு ஒரு காதலன் என்றுதான் அந்த கேரக்டர் இருந்தது. கம்போஸிங் உட்காரும் போது எம்எஸ் விஸ்வநாதனையும் அவரது உதவியாளர் பிரசாத் என்பவரையும் பார்த்த பிறகுதான், கேரளாவில் இருந்து பாலக்காட்டு மாதவன் ஒரு சின்ன பையன் காஜா செரீப்புடன் மியூசிக் டைரக்டராகும் ஆசையில் சென்னைக்கு வருவது போல் கதையை மாற்றி அமைத்தேன்.
பாலக்காட்டு மாதவன் மலையாளத்தில் பேசினாலும் அந்த சின்ன பையன் தமிழில் பேசுவதை காமெடியாக்கி காட்சிகளை உருவாக்கினேன். அது நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என்றும் தோன்றியது. மேலும் மாதவன் கேரக்டர் டெவலப் ஆன பிறகு அதை நானே செய்ய வேண்டும், அப்போதுதான் என்றும் கூறியதால் அந்த கேரக்டரில் நானே நடித்தேன்.
ஆனால் டாக்டர் கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி வந்தது. அதற்கு நடிகர் சிவக்குமாரிடம் கேட்டோம். அவர் மறுத்து விட்டார். இவரே டைரக்டர், வசனகர்த்தா. ஹீரோவும் இவர்தான். அதனால் நாம நடிக்கிற டாக்டர் கேரக்டர் முக்கியத்துவம் இல்லாம போய்விடுமோ என்று சந்தேகப்பட்டார். அதனால் அவர் நடிக்கவில்லை.
அடுத்த சாய்ஸ் என்று பார்க்கும் போதுதான் ராஜேஷ் எனக்கு சரியாக பட்டார். அந்த டாக்டர் லுக் அவருக்கு இருந்தது. பேஷண்டுகளை பார்ப்பது கவனிப்பது அப்படி ஒரு கேரக்டருக்கு ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என்று அவரையே நடிக்க வைத்தேன் என்று இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார். அந்த 7 நாட்கள் படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.





