- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்துக்கு விருது கிடைக்காமல் தடுத்தவரே எம்ஜிஆர் தான்… - விழா மேடையில் ஓபனாக...

என் படத்துக்கு விருது கிடைக்காமல் தடுத்தவரே எம்ஜிஆர் தான்… – விழா மேடையில் ஓபனாக பேசிய இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட சிறந்த கலைஞர் கே பாக்யராஜ். அவர் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்கு உரியவர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பாடம் கற்றவர். 1980களில் கே பாக்யராஜ் இயக்கிய படங்கள் எல்லாமே வெள்ளி விழா படங்கள்தான்.

இரு தினங்களுக்கு முன்பு தான் நடிகர் கே பாக்யராஜ் தனது பிறந்த நாள் மற்றும் தமிழ் சினிமாவில் 50 ஆண்டு கால பயணம் என்ற நிறைவு விழாவையும் கொண்டாடினார். அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினார்.

- Advertisement -

இதற்கிடையே நடந்த மற்றொரு விழாவில் இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய அந்த 7 நாட்கள் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பரிசு கேடயம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் இயக்குனர்கள் பார்த்திபன் பாண்டியராஜன் மாரி செல்வராஜ் சுரேஷ் கிருஷ்ணா பி வாசு கேஎஸ் ரவிக்குமார் நடிகை சிம்ரன் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் கே பாக்யராஜ் கூறியதாவது, அந்த 7 நாட்கள் படத்தை தேர்வு செய்து இந்த விருதை வழங்கியதற்கு மிகவும் நன்றி. இந்த படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது இந்த படத்துக்கு தமிழக அரசின் விருது கிடைக்கப் போகிறது என்ற தகவலும் எனக்கு வந்தது.

- Advertisement -

ஆனால் தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்ட போது என் படம் அதில் இல்லை. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக எம்ஜிஆர் இருந்தார். அவர் என்னை அழைப்பதாக தகவல் வந்தது. அவரை நேரில் பார்க்கப் போனேன். அப்போது அவர் என்னிடம், எனக்கு கொடுத்த விருது பட்டியலில் முதலில் உன் படத்தின் பெயர்தான் இருந்தது. அதை நான்தான் அழித்தேன் என்று அவரே சொன்னார்.

எனக்கு என்னவென்று புரியவில்லை. அவரே அதற்கான காரணத்தையும் சொன்னார். அந்த 7 நாட்கள் படம் நன்றாக போகிறது. அந்த படம் வெற்றியடைந்து விட்டது. இப்போது அந்த படத்துக்கு நான் விருது கொடுத்தால் அதை அரசியலாக்கி விடுவார்கள். என்னை சார்ந்து நீ பாலக்காட்டு மாதவன் கேரக்டரை உருவாக்கியதாக பேசுவார்கள். அதனால் அந்த படத்துக்கு வரவேற்பு கொடுக்கும் ரசிகர்களின் மனநிலை மாறிப்போகும். அதனால்தான் உன் படத்துக்கு விருது தரவில்லை என்று கூறினார். இப்போது அந்த படத்துக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கே பாக்யராஜ் பேசினார்.

- Advertisement -

சற்று முன்