- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு 49 படத்தில் கதாநாயகி இந்த சென்சேஷனல் நடிகையா? போடு வெடிய… அந்த நடிகரும் சிம்புவுடன்...

சிம்பு 49 படத்தில் கதாநாயகி இந்த சென்சேஷனல் நடிகையா? போடு வெடிய… அந்த நடிகரும் சிம்புவுடன் மீண்டும் இணையப் போகிறாராமே? – வேற லெவல் சம்பவம்தான்!

- Advertisement -

நடிகர் சிம்பு பிறந்த நாளன்று கடந்த 3ம் தேதி அவர் நடிக்கப் போகும் 3 படங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. பத்துதல படத்துக்கு பிறகு சிம்பு நடிப்பில் எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்டோர் நடித்த தக்லைப் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், சிம்பு பிறந்த நாளில் கடந்த 3ம் தேதி பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49 படம், அடுத்து சிம்புவே தனது தயாரிப்பு நிறுவனம் அட்மன் சினி ஆர்ட்ஸ் சார்பில் தயாரிக்கும் படம். இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். அடுத்து சிம்பு 51 படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் 50வது படத்துக்கான பிரமோஷனல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, சிம்பு தனது 49வது படத்தில் நடிக்க உள்ளார். ஏனெனில் சிம்பு நீண்ட கூந்தல் வளர்த்து இருப்பதால் இந்த பிரமோ ஷூட்டை முடித்த பின், அவர் ஹேர்கட் செய்த பிறகுதான், வேறு படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். அதனால் சிம்பு 49 படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 16ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிம்பு நடிக்கும் 49வது படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்ற சந்தேகம் நீடித்த நிலையில் தற்போதைய தகவலின்படி நடிகை சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் மட்டுமே அவர் நடிப்பார் என்பதால், சிம்பு படத்தில் அவர் நடிக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி நீடிக்கிறது. ஆனால் பார்க்கிங் பட இயக்குனர் என்பதால், நாயகிக்கும் நடிக்க அதிக வாய்ப்பிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல் சிம்புவுடன் மற்றொரு பிரபல நடிகரும் இணைய இருக்கிறார். அதாவது மீண்டும் சந்தானம் காமெடி நடிகராக மாற வேண்டும், காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என மதகஜ ராஜா படம் பார்த்த ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், சிம்பு 49 படத்தில் சந்தானமும் சிம்புவுடன் காமெடி ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் சந்தானம் நடிக்க மற்றொரு முக்கிய காரணம், சமீப காலமாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. அத்துடன் சந்தானத்தை சினிமாவில் அறிமுகம் செய்ததே நடிகர் சிலம்பரசன்தான். அதனால் சிம்பு அழைத்தால் நிச்சயம் சந்தானம் மறுக்காமல் தனது நன்றி கடனை காட்டுவார் என்பதும் கவனிக்கத்தக்கது. அதனால் சிம்பு 49 படத்தில் சாய்பல்லவி, சந்தானம் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்