- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால்…. கவுண்டமணி செந்தில் ரியாக்‌ஷன் என்ன? - உண்மையை போட்டுடைத்த இயக்குனர் கே...

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால்…. கவுண்டமணி செந்தில் ரியாக்‌ஷன் என்ன? – உண்மையை போட்டுடைத்த இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய திரைக்கலைஞராக இருப்பவர் கே பாக்யராஜ். இயக்குனராக கதாசிரியராக நடிகராக கே பாக்யராஜ் ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்தவர். இந்திய அளவில் சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று புகழுக்கு சொந்தக்காரர். அவர் இயக்குனராக பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி செந்தில் நடிகை கோவை சரளா கல்லாப்பட்டி சிங்காரம் மண்ணாங்கட்டி சுப்ரமணியம் செம்புலி ஜெகன் என பலரை சொல்லலாம். 16 வயதினிலே படத்தின் தனது குருநாதர் பாரதிராஜாவிடம் வற்புறுத்தி கவுண்டமணியை சிபாரிசு செய்து நடிக்க வைத்தவர் கே பாக்யராஜ்தான்.

- Advertisement -

அதன்பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் பெட்டிக்கடை டெய்லர் காளியண்ணன் கேரக்டரில் படம் முழுவதும் வரச் செய்தார். சரோஜா குப்பை கொட்றியா கொட்டு கொட்டு என்று கவுண்டமணி பேசும் டயலாக் இன்றளவும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. கவுண்டமணி என்ற சிறந்த காமெடி கலைஞன் வெளிச்சத்துக்கு காரணமாக இருந்தவர் கே பாக்யராஜ்.

அதே போல், பொய் சாட்சி படம் மூலம் நடிகர் செந்திலை தனது படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். ஊருக்கு சொல்ல பஸ்சுக்கு காசு கேட்கும் செந்திலை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பலவிதமான உணவு ரகங்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு செந்திலை சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆகி விடுவார் பாக்யராஜ். அப்படி ஒரு காமெடி காட்சியில் செந்திலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு கவுண்டமணி செந்தில் காமெடி கூட்டணி தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவுக்கு நீண்டகால ஆட்சியே நடத்தி விட்டது. சமீபத்தில் கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படவிழாவில் இயக்குனர் கே பாக்யராஜ் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது கவுண்டமணி செந்தில் குறித்து குறிப்பிட்டு சில விஷயங்களை பகிர்ந்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கவுண்டமணி வந்துவிட்டால் தன்னுடைய கேரக்டர், நடிக்க வேண்டிய சீன் டயலாக் சக நடிகர்கள் குறித்த விஷயங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார். ஆனால் செந்தில் வரும்போதே ஒரு பெட்ஷீட்டும் சீட்டுக்கட்டும் கொண்டு வந்து விடுவார். ஒரு ஓரமாக துணி விரித்து, சீட்டாட்டம் தொடங்கி விடுவார். என்ன செந்தில் இது என்று நான் கோபப்பட்டாலும், அண்ணே அண்ணே இப்படியே பழகிப் போச்சுண்ணே, ஷாட் சொன்னவுடனே வந்துடுறேன் அண்ணே என்று பேசி, என்னை சமாளித்து விடுவார் என்று கே பாக்யராஜ் அந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்