- Advertisement -
Homeபொழுதுபோக்குபாதியில் நின்று போன எம்ஜிஆர் படம்… அதை தனது படமாக்கிய ‘மூளைக்கார’ கதாசிரியர் கே பாக்யராஜ்...

பாதியில் நின்று போன எம்ஜிஆர் படம்… அதை தனது படமாக்கிய ‘மூளைக்கார’ கதாசிரியர் கே பாக்யராஜ் – அந்த படத்தை நீங்க பார்த்திருக்கீங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போதைய இளம் நடிகர்கள் சிலர், தங்களை ரஜினிகாந்த் ரசிகன், கமல்ஹாசன் ரசிகன் என்று பெருமையாக நேர்காணல்களிலும் விழா மேடைகளிலும் கூறுகின்றனர். இதில் பல இயக்குனர்களும் உள்ளனர். அதே போல் 1980 – 90களில் முன்னணி நடிகர்களாக இருந்த சிலர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகர்களாக இருந்தவர்கள்தான்.

அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்கள் கே பாக்யராஜ் விஜயகாந்த் சத்யராஜ் சரத்குமார் ராமராஜன் போன்றவர்கள் எம்ஜிஆரின் மீது தீவிரமான பற்றும் மரியாதையும் அன்பும் கொண்டவர்கள். நடிகர் ராமராஜன் இதுவரை தனது படங்களில் புகை பிடிப்பது போல, மது அருந்துவது போல நடித்தது இல்லை. அதற்கு காரணம் அவர் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகர் என்பதால்தான். இதை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

தன் மீது அதீத அன்பும் பாசமும் மரியாதையும் கொண்டவர் கே பாக்யராஜ் என்பதை அப்போதே எம்ஜிஆர் நேரடியாக உணர்ந்திருந்தார். அதனால்தான் கே பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என்றும் அவர் பெருமையாக அறிவித்தார். அத்துடன் அமெரிக்காவில் உடல் நலமின்றி எம்ஜிஆர் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்ற போது, கே பாக்யராஜை மட்டுமே தன்னை நேரில் அமெரிக்கா வந்து பார்க்க அனுமதி தந்தார்.

எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் அரசியல் பணியில் தீவிரமாக இருந்தபோது அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தில் நடித்தார். லதா சங்கீதா நம்பியார் உள்ளிட்டோரும் அந்த படத்தில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தனர். ஆனால் சில காரணங்களால் எம்ஜிஆர் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய் அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சுமார் அரைமணி நேரம் வரை ஓடக்கூடிய வகையில் மட்டுமே அதில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தன.

- Advertisement -

எம்ஜிஆரின் தங்கை சங்கீதாவை, நம்பியார் கெடுத்து விடுகிறார். அது எம்ஜிஆருக்கு தெரிந்து விடுகிறது. தங்கைக்கு குழந்தையும் பிறக்கிறது. அப்போது எம்ஜிஆர் ஒரு பாடலும் பாடுகிறார். இவை மட்டுமே காட்சிகளாக எடுக்கப்பட்டு இருந்தது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இதை வைத்து கே பாக்யராஜ், ஒரு கதையை புதிதாக உருவாக்குகிறார். எம்ஜிஆரின் தங்கைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளாக கே பாக்யராஜ். அதில் ஒருவர் போலீஸ் அதிகாரி. மற்ற ஒருவர் ரவுடியாக சிறைக்கு சென்று திரும்பி வந்தவர்.

கோழையான போலீஸ் கே பாக்யராஜூக்கு பதிலாக, ரவுடியாக உள்ள கே பாக்யராஜ், போலீஸாக சென்று சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை தடுத்து நடவடிக்கை எடுப்பார். இந்த படத்தில் சங்கீதா நம்பியார் விஜயகுமார் கௌதமி சில்க் ஸ்மிதா போன்றவர்களை பாக்யராஜ் நடிக்க வைத்திருந்தார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின் அவசர போலீஸ் 100 என்ற டைட்டிலில் 1990ம் ஆண்டில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் கே பாக்யராஜின் கதை ஆசிரியர் திறமையை வெளிப்படுத்திய ஒரு படமாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

- Advertisement -

சற்று முன்