- Advertisement -
Homeபொழுதுபோக்குதயவுசெஞ்சு மீனாவை விட்டுங்க, கவிஞர் வைரமுத்துவிடம் கையெடுத்து கும்பிட்ட பிரபல இயக்குனர் - அட இப்படி...

தயவுசெஞ்சு மீனாவை விட்டுங்க, கவிஞர் வைரமுத்துவிடம் கையெடுத்து கும்பிட்ட பிரபல இயக்குனர் – அட இப்படி ஒரு சம்பவமும் நடந்திருக்கிறதா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு வெளியான படம் முத்து. மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான படம் ‘தென்மாவின் கொம்பத்து என்ற படத்தின் ரீமேக்தான் முத்து படமாக வெளியானது. நடிகர் மோகன்லால், நெடுமுடி வேணு, ஷோபனா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படத்தை தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். எஜமான் படத்துக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா இதில் நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையேயான மோதல் காதல் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இசைப்புயல் ஏஆர்ரஹ்மான் இசையில், இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

குறிப்பாக ஒருவன் ஒருவன் முதலாளி தில்லானா தில்லானா உள்ளிட்ட பாடல்கள் இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினி அப்பா மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். ஜமீன்தார் கேரக்டரில் சரத்பாபு வில்லனாக ராதாவி மற்றும் கேமியோ ரோலில் ரகுவரனும் நடித்திருந்தனர். ரஜினிக்கு பெரிய ஹிட் தந்த படங்களில் முத்துவும் ஒன்று.

முத்து படத்தில் வரும் தில்லானா தில்லான பாடல் ரொம்பவும் பிரபலமான பாடலாக இருந்தது. இந்த பாடலை எழுதும்போது நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம் குறித்து படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர் கூறியதாவது, தில்லானா தில்லானா என்ற இந்த பாடலில் முதலில் தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் உன்னோடு தானே, நான் மட்டும் தள்ளி நிற்பேனா என்று எழுதியிருந்தார் வைரமுத்து.

இதெல்லாம் வேண்டாம் சார் புதுசா எதாவது எழுதுங்க என்று நான் சொன்னபோது, அவர் கூட்டம் கூட்டம் என்றே எழுதினார். நான் கடைசியாக இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இதை கேட்டு டென்ஷன் ஆன கவிஞர் வைரமுத்து, எதுவுமே வேண்டாம் வேண்டாம் என்று நீங்கள் சொன்னால், தில்லானா தில்லானா என்று தான் எழுத வேண்டும் என்று சொன்னார். அதை கேட்டவுடன் இது சூப்பரா இருக்கே என்று அதையே வைத்துக்கொண்டோம்.

அதன்பிறகு மீனா பெயரை அந்த பாடலில் சேர்த்தார். ஆனால் ஏற்கனவே நாட்டாமையில் மீனா பொண்ணு என்ற பாடல் போட்டாச்சு. இதில் வேண்டாம் என்று சொன்னேன். அதன்பிறகு தில்லானா தில்லான நீ தித்திக்கின்ற மீனா என்று எழுதினார். நான் கையெடுத்து கும்பிட்டு மீனா வேண்டாம் சார் மீனாவை விட்டுடுங்க என்று சொல்ல, அதன்பிறகுதான் நீ தித்திக்கின்ற தேனா என்று வைரமுத்து மாற்றி எழுதினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் அதில் கூறியுள்ளார்.

சற்று முன்