- Advertisement -
Homeபொழுதுபோக்குஅசால்ட்டாக 1000 கோடி ரூபாய் வசூலை கடக்கும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்கள்… 100 கோடி...

அசால்ட்டாக 1000 கோடி ரூபாய் வசூலை கடக்கும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்கள்… 100 கோடி ரூபாய் வசூலை தொடவே திணறும் தமிழ் சினிமா ஹீரோக்கள் – இந்த அவலம் மாறுமா?

- Advertisement -

நடப்பாண்டில் 2024ம் ஆண்டில் தமிழில் 250க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகி உள்ளன. அஜீத்குமார் நடித்த படம் மட்டுமே இந்த ஆண்டில் வெளியாகவில்லை. ஆனால் அவரது படமும் ரூ. 100 கோடி வசூலை தாண்டியிருக்குமா என்று உறுதியாக கூற முடியாது.

இந்தாண்டில் வெளியான படங்களில் ரூ. 100 கோடி வசூலை தொட்ட மொத்த படங்களின் எண்ணிக்கை 9 தான். அதில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன், கமல் நடித்த இந்தியன் 2, விஜய் நடித்த தி கோட், சூர்யா நடித்த கங்குவா, விக்ரம் நடித்த தங்கலான், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, தனுஷ் நடித்த ராயன், சுந்தர் சி நடித்த அரண்மனை 4, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ஆகிய 9 படங்கள்தான்.

- Advertisement -

இதில் விஜய் நடித்த தி கோட் 465 கோடி ரூபாய், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் ரூ. 325 கோடி ரூபாய், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ரூ. 250 கோடி என்ற என்ற நிலையில் விஜய் முதலிடம், சிவகார்த்திகேயன் 2ம் இடம், ரஜினி 3ம் இடத்திலும் உலகளவில் அதிக வசூல் செய்த படங்களை தந்துள்ளனர்.

வசூலில் ரூ. 100 கோடியை தொடாவிட்டாலும் ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக இந்த ஆண்டில் வெளியான சித்தா, ஸ்டார், லவ்வர், வடக்குப்பட்டி ராமசாமி, மெய்யழகன், லப்பர் பந்து, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாக வெற்றி பெற்றுள்ளன. இதில் லப்பர் பந்து வேற லெவல் படமாக அமைந்தது.

- Advertisement -

ரூ. 100 கோடி வசூலை கடந்த நிலையிலும் இந்தியன் 2, கங்குவா, வேட்டையன், தங்கலான் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக மிக மோசமான தோல்வி படங்களாக தான் ரசிகர்களால் சொல்லப்பட்டது. ஷங்கர் இயக்கிய கமல் படம், தசெ ஞானவேல் இயக்கிய ரஜினி படம், பா ரஞ்சித் இயக்கிய விக்ரம் படம் என்ற அடையாளங்களால் மட்டுமே அந்த படங்கள் ரூ. 100 கோடியை கடந்தது.

ஆனால் இந்தியில் ஜவான், பதான் படங்கள், தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி, தேவரா, புஷ்பா 2 போன்ற படங்கள் வெகு எளிதாக ரூ. 1000 கோடியை வசூலில் கடந்துள்ளன. கன்னடத்தில் வெளியான கேஜிஎப் 2 படமும் இந்த சாதனையை புரிந்தது. ஆனால் தமிழில் வசூல் மன்னன், வசூல் சக்கரவர்த்தி என கொண்டாடப்படும் தமிழ் சினிமா ஹீரோக்கள் 1000 கோடி ரூபாய் வசூலை பற்றி இன்னும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

- Advertisement -

சற்று முன்