தமிழ் சினிமாவில் பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். பிறகு அவர் இயக்கிய ஜிகர்தண்டா பேட்ட இறைவி ரெட்ரோ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அவரது 10வது படமாக டோரதி படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாலினம் குறித்த கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் ரிஷிகாந்த் சனந்த் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான படம் டோரதி. மதுரை மண் சார்ந்த ஒரு கிராமத்து ரவுடியிசம் கதையாக இது உள்ளது. இந்த படத்திற்கு ஒரு தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதே நேரத்தில் கலவையான விமர்சனங்களும் இந்த படத்துக்கு எழுந்துள்ளது. துவக்கத்தில் ரவுடியிசம் போல துவங்கி திருநங்கைகள் பற்றிய படமாக ஒரு கட்டத்தில் இந்த படத்தின் கதைக்களம் மாறிச் செல்கிறது. அதனால் டோரதி படம் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று பேசிய படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, டிவிட்டர் உலகம் என்று இருக்கு இல்லையா? அதுவே தின்ன உலகம். அதுல நீங்க சொல்ற மாதிரி சொல்றவங்க அதைவிட சின்ன உலகம். ஒரு சினிமாவை பார்க்க வரும் ரசிகர்கள் ரொம்ப பெருசு.
படத்தைப் பற்றி எவ்வளவோ தியேட்டர்ல நல்லா பேசறாங்களே? அதைப் பத்தியும் கேளுங்க. யாரோ ஒரு நாலு பேர் டிவிட் பண்றாங்க அதையே கேட்டுகிட்டு இருக்கீங்க. ஆன்லைன்ல வெறுப்பா சொல்ற விஷயம் கொஞ்சம் இருக்கு. தியேட்டருக்கு பெருசா தெரியல. ஒவ்வொருத்தரும் படம் பாக்கணும் தான் நான் விருப்பப்படுறேன்.
இந்த படத்தை பற்றி விவாதம் பண்றதை நான் ஆரோக்கியமாக பார்க்கிறேன். திருநங்கைகள் பிரச்சனை கதையே வரக்கூடாதுன்னு சொல்றாங்கன்னா அது யாரோட பிரச்சனை? அவங்களும் வந்து படம் பாக்கணும். அவங்களும் பன்ச் போடறாங்களான்னு நானும் பன்ச் போட்டனா அது போயிட்டே இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் பதில் அளித்து இருக்கிறார்.





