- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ரோ பட கதையை நடிகர் சூர்யாவுக்காக நான் எழுதவில்லை… அவரை நினைத்துதான் எழுதினேன் - இயக்குனர்...

ரெட்ரோ பட கதையை நடிகர் சூர்யாவுக்காக நான் எழுதவில்லை… அவரை நினைத்துதான் எழுதினேன் – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன்டாக்!

- Advertisement -

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ. இந்த படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே கனிமா மற்றும் ஏ ஒன் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன.

மேலும் கடந்த 18ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் நடந்தது. இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் சூர்யா இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் கலந்துக்கொண்டு பேசினர்.

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வரும் சூர்யாவுக்கு நிச்சயமாக ரெட்ரோ படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ படத்தின் டிரெய்லரும் அந்த நம்பிக்கையை சூர்யா ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் இது காதல் கலந்த ஆக்சன் கதையாக உருவாகி உள்ளது.

பீட்சா ஜிகர்தண்டா இறைவி பேட்ட ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை வித்யாசமான ஒரு கதைக்களத்தில் உருவாக்கி இருப்பதாகவும்,. படம் குறித்த எந்த தகவலையும் சொல்லாமல் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் ஏற்படும் தாக்கமே இந்த படத்தின் போக்கை தீர்மானிக்கும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரெட்ரோ படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுப்பராஜ் கூறுகையில், ரெட்ரோ படத்தை நான் நடிகர் சூர்யாவை மனதில் வைத்து எழுதவில்லை. இந்த படத்தின் கதையை நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மனதில் வைத்துதான் எழுதினேன். ரஜினிக்காக எழுதிய போது இந்த கதை முழுக்க முழுக்க ஆக்சன் கதையாக மட்டுமே இருந்தது.

அதன்பிறகு சூர்யா சார் இந்த படத்தில் நடிக்கும் சூழல் உருவான போது, ரஜினிக்காக எழுதிய ஆக்சன் கதையை சற்று மாற்றி காதல் கதையாக நடிகர் சூர்யாவிடம் கதை சொன்னேன் என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார். வழக்கமாக கார்த்திக் சுப்பராஜ் எந்த கதையை எழுதினாலும் அதில் ரஜினியை தான் நாயகனாக மனதில் நினைத்து எழுதுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்