- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரே ஒரு வார்த்தைதான்.. ரகுவரன் நடித்ததை பார்த்து மிரண்டு போன கே.எஸ்.ரவிக்குமார்

ஒரே ஒரு வார்த்தைதான்.. ரகுவரன் நடித்ததை பார்த்து மிரண்டு போன கே.எஸ்.ரவிக்குமார்

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ வில்லன்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் கத்தி பேசியும் கத்தியை வைத்து பேசியும் பிரபலமடைந்திருக்கிறார்கள். ரகுவரனோ அப்படி இல்லை. மெலிந்த தேகம், உயரமான உருவம், ஒடுங்கிய முகம் என வில்லனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதவர். ஆனால் அவரோ, தனக்கு இருப்பதை வைத்துக் கொண்டே வில்லனாக மிரட்டியவர். அவரது வாய்ஸை கேட்டால் பயப்படாத 90ஸ் கிட்ஸே கிடையாது.

அவர் ஸ்கிரீனில் வரும் போதெல்லாம் திரையரங்கில் பெருத்த அமைதி நிலவிய சம்பவம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது. பாட்ஷா படத்தில்கூட ரஜினியை பார்த்து கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தவர்கள் ரகுவரன் எண்ட்ரி ஆனதும் ஒட்டுமொத்த தியேட்டரும் சைலன்ட் ஆனார்கள் என்று ரகுவரின் தம்பியும் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்

- Advertisement -

வில்லனாக மிகப் பிரபலமாக இருந்த ரகுவரன் ஆரம்பத்தில் வில்லனாகவெல்லாம் தோன்றவில்லை. ஹீரோவாகதான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். சில படங்களில் அப்படி நடிக்கவும் செய்திருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான புரியாத புதிர் படத்தில் ரகுவரனின் ஆக்டிங் பயங்கரமாக இருக்கும். இன்றுவரை அந்த படத்தில் ஒரு சீன் பார்க்கும்போது அனைவரும் மூக்கின் மேல் விரலை வைப்பார்கள்

தனது மனைவியை சந்தேகப்படும் ரகுவரன் வீட்டுக்குள் வைத்து இன்னொருவருடன் பார்க்கும் போது அதை தவறாக புரிந்துகொள்வார். அப்போது ஐ நோ என்ற ஒரே ஒரு டயலாக் மட்டும்தான் பேசுவார். அதை பல்வேறு மாடுலேஷனில் பேசிக்கொண்டே இருப்பார். ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு அந்த சீனையே ஒட்டுமொத்தமாக தூக்கி சாப்பிட்டிருப்பார் ரகுவரன்.

- Advertisement -

தற்போது அந்த சீன் எடுக்கப்பட்டபோது நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அந்த சீன் எடுக்கும் அன்றைய தினம் ரகுவரன் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி என்பதால் தாமதமானதால் டயலாக் எல்லாம் எதுவும் இல்லை ஒரே வார்த்தைதான் அதைத்தான் பேச வேண்டும். ஐ நோ என்ற வார்த்தைதான் அது எனக் கூறியிருக்கிறார்.

இதைக் கேட்ட ரகுவரன்; அது எப்படி சார் ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகும் என கேட்க அதெல்லாம் கனெக்ட் ஆகும் என ரவிக்குமார் சொல்லியிருக்கிறார். உடனே ரகுவரனும், சரி நீங்கள் முதலில் சொல்லி காண்பியுங்கள் எனக் கூற கே.எஸ். ரவிக்குமார் ஐ நோ என்ற வார்த்தையை 66 மாடுலேஷனில் சொல்லி காண்பித்திருக்கிறார். மேலும், இதைவிட ஒரு முறையாவது நீ கூட சொல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார் ரவிக்குமார்.

பிறகு ஷாட் ரெடி ஆகியிருக்கிறது. ஐ நோ என்ற வார்த்தையை ரகுவரன் மொத்தம் 34 மாடுலேஷனில் கூறியிருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாத ரகுவரன் கட் என்று கத்தி சிகரட்டை கீழே போட்டு இருக்கிறார். பிறகு அதனை டப்பிங்கில் ஐ நோ என்று ரகுவரன் கூறுவதுபோல் கேஎஸ் ரவிக்குமார் மாற்றி படத்தில் வைத்திருக்கிறார்.

இந்த தகவலை கேஎஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த பேட்டியில் பேசிய அவர் ’ரகுவரன் 34 தடவைதான் சொன்னார் ஆனால் அவரது மாடுலேஷனிலும், பாடி லாங்குவேஜிலும் அந்த வார்த்தையை கேட்கும்போது அது வேறு எங்கேயோ இருந்தது. மிகச்சிறந்த நடிகர் ரகுவரன் என்றார்.

- Advertisement -

சற்று முன்