- Advertisement -
Homeபொழுதுபோக்குபழைய வன்மத்தை கக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர் எதிர்பார்த்தது இன்று நடந்து விட்டதாமே? -...

பழைய வன்மத்தை கக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர் எதிர்பார்த்தது இன்று நடந்து விட்டதாமே? – கொந்தளிப்பில் அஜீத்குமார் ரசிகர்கள்!

- Advertisement -

போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்கேனஷ் சிவன். தொடர்ந்து நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை டைரக்ட் செய்தார். இப்போது அவரது இயக்கத்தில் எல்ஐகே என்ற படம் உருவாகியுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பதை விட நடிகை நயன்தாராவின் கணவர் என்பதுதான் அவரது பெரிய அடையாளம். ஏனென்றால் விக்னேஷ் சிவன் இயக்கிய எந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருக்கவில்லை. அதனால் அவர் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களில் ஒருவராக தான் இன்றுவரை இருந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துணிவு படத்தில் அஜீத்குமார் நடித்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில்தான் அவர் நடிப்பதாக இருந்தது. கதை கேட்டும் ஓகே சொல்லி இருந்தார். அந்த நேரத்தில் அஜீத்குமாரின் அப்பா சுப்ரமணியம் மறைந்ததால், படப்பிடிப்பு துவங்குவது சில மாதங்கள் தள்ளிப் போனது. பிறகு நடிகர் அஜீத்குமார், தனது படத்தை இயக்க வேண்டாம் என விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார்.

இதனால் விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு அஜீத்குமார் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டது. விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் திருப்தி வராததால் அஜீத்குமார் நடிக்க சம்மதிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. இதுகுறித்து நயன்தாரா, அஜீத்குமாரிடம் சிலமுறை போனில் பேசி வலியுறுத்தியும் அஜீத்குமார் திட்டவட்டமாக நோ சொல்லி விட்டார். இனி அஜீத் படங்களில் நடிக்க மாட்டேன் என நயன்தாரா கோபமாக சொன்னதாக கூட தகவல் பரவியது.

- Advertisement -

இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் திரிஷா நடிப்பில் இன்று விடாமுயற்சி படம் வெளியாகி உள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை என்கிற எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. அஜீத்குமார் இமேஜையே டேமேஜ் செய்துவிட்டார் என்று டைரக்டர் மகிழ்திருமேனி குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது.

இதற்கிடையே இன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள விக்னேஷ் சிவன் அதில், சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நி்கழும் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனக்கு வாய்ப்பளிக்காத அஜீத்குமார் குறித்தும், அவர் நடித்த விடாமுயற்சி படம் எதிர்மறை விமர்சனங்களையே அற்புதம் நிகழ்ந்து விட்டதாக அவர் குத்தி காட்டியிருக்கிறார் என, ஏகே ரசிகர்கள் கொந்தளிப்பில் கமெண்ட்களில் விக்கியை திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்