- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் 7 நல்ல படங்களை தந்தேன்… ரசிகர்கள் பாராட்டுனாங்க… ஒரு படத்துக்கு கூட விருது...

தமிழ் சினிமாவில் 7 நல்ல படங்களை தந்தேன்… ரசிகர்கள் பாராட்டுனாங்க… ஒரு படத்துக்கு கூட விருது தரலையே… ஏன்? – மன குமுறலை வெளிப்படுத்திய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ்நாடு அரசு சார்பில் 10 நாட்களுக்கு முன்பு திரைப்பட விருதுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்காக சிறந்த படங்கள் சிறந்த நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் குறித்து இந்த பட்டியலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இதில் மக்களால் ரசிக்கப்பட்ட படங்கள், நல்ல வரவேற்பை பெற்ற சிறந்த படங்கள் விருது பட்டியலில் இடம் பெறவில்லை.

இது தமிழ் சினிமா இயக்குனர்கள் நடிகர்கள் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா தியேட்டரிலும் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகாத சண்டைக்காரி என்ற படத்துக்கு மட்டும் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் இயக்குனர் மதன் தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக்குழுவில் ஒரு உறுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் குறித்து இயக்குனர்கள் சேரன் நயினார் கோபி உள்ளிட்ட சிலர் வெளிப்படையாகவே தனது விமர்சனத்தை முன்வைத்து இருந்தனர். டிவி சீரியல் நடிகை லட்சுமி வெளியிட்ட ஒரு வீடியோவில் இது உங்கள் குடும்ப விருதா? உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தருவதற்கு என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படி பல குளறுபடிகளும் பாரபட்சமும் தமிழக அரசின் விருதுகள் பட்டியலில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாணாக்காரன் படத்தில் சிறந்த நடிப்பை தந்த எம்எஸ் பாஸ்கர் லால் போன்ற நடிகர்கள் புறக்கணிக்கப்பட்டு நடிகர் போஸ் வெங்கட் சிறந்த நடிகர் என்று விருது அறிவிக்கப்பட்டதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் போஸ் வெங்கட் ஒரு திமுக ஆதரவாளர்.

- Advertisement -

இந்நிலையில் திரைப்பட இயக்குனர் சுசீந்திரன் தனது ஆதங்கத்தை ஒரு பதிவின் மூலம் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் சுசீந்திரன். அவரது இயக்கத்தில் உருவான அழகர் சாமியின் குதிரை படம் ஒன்றே போதும். அவரது சிறந்த படைப்பாளி என்று சொல்வதற்கு. இந்த படத்தில் நடித்த நடிகர் அப்புக்குட்டி சிறந்த துணை நடிகர் தேசிய விருது கிடைத்தது.

தமிழக அரசின் விருதுகள் குறித்து இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட ஒரு பதிவில், வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல அழகர்சாமியின் குதிரை ஆதலால் காதல் செய்வீர் பாண்டியநாடு ஜீவா மாவீரன் கிட்டு இந்த 7 திரைப்படங்களும் மக்கள் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. எனினும் எனக்கு எந்த படத்திற்கும் தமிழக அரசு விருது அளிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது என்று சுசீந்திரன் அதில் வருத்தமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்