- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசன் ஏமாற்றி விட்டதாக நடிகர் சங்கத்தில் புகார்; தமிழ் சினிமாத் துறையில் பரபரப்பு ...

நடிகர் கமல்ஹாசன் ஏமாற்றி விட்டதாக நடிகர் சங்கத்தில் புகார்; தமிழ் சினிமாத் துறையில் பரபரப்பு – அப்செட் ஆன ஆண்டவர் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக போற்றப்படுகிறார் கமல்ஹாசன். நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் என கமலஹாசனுக்கு பல்வேறு அடையாளங்கள் உண்டு. திறமையானவர் உழைப்பாளி, பிறவி நடிகர் கலைஞானி என்றெல்லாம் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன், புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

சொந்த வாழ்க்கையில் பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளானவர் கமல்ஹாசன். சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர், குறிப்பாக மூன்று திருமணங்கள், மனைவிகளுடன் விவாகரத்து, சில நடிகைகளுடன் தொடர்பு என்று தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

- Advertisement -

எனினும் 69 வயதிலும் இப்போதும் ஹீரோவாக நடித்து வரும் கமல்ஹாசன், இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் ஒரு மிகச்சிறந்த கலைஞராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்லைப் என்ற படத்தில் நடிகர் கம்லஹாசன் நடித்து வருகிறார். மிக விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூனில் வெளிவர இருக்கிறது.

அதுமட்டுமின்றி பான் இந்தியா படமான கல்கி படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். 15 நிமிடங்கள் வரும் இந்த படத்திற்காக, கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த படத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.இந்த படம் 2 பாகங்களாக வெளிவர இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது, டைரக்டர் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் லிங்குசாமி, நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படம், கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இந்த படத்தை தயாரித்த வகையில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து, கடனிலும் சிக்கியது.

உத்தம வில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடு செய்யும் விதமாக இன்னொரு படத்தில் நடித்து கொடுப்பதாகவும் கமல் எழுத்து பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது அண்ணன் சந்திரஹாசனும் உடனிருந்தார். ஆனால் ஒன்பது ஆண்டுகளாகியும் இன்னும் கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்கான கால்ஷீட் கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டதைப் போல, மிக விரைவில் எங்களுக்கு கால்ஷீட் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்