- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென தெலுங்கு பக்கம் ஒதுங்கும் லோகேஷ் கனகராஜ்... பிரபாஸ்தான் கதையின் நாயகனாம்... என்ன இப்படி இறங்கிட்டாரு...

திடீரென தெலுங்கு பக்கம் ஒதுங்கும் லோகேஷ் கனகராஜ்… பிரபாஸ்தான் கதையின் நாயகனாம்… என்ன இப்படி இறங்கிட்டாரு…

- Advertisement -

மாநகரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஒரே நாளில் எடுக்கப்படும் கதையாக மாநகரத்தை கையில் எடுத்த அவர், சிறப்பான திரைக்கதை மூலம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத புதுமையான களத்தை, மாநகரத்தில் கொடுத்ததால் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை பூர்த்தி செய்யும் விதமாக, கார்த்தியுடன் இணைந்தார் லோகேஷ் கனகராஜ். இருவரின் கடினமான உழைப்பில் வெளிவந்த கைதி திரைப்படம், பலரையும் கவனிக்க வைத்தது.

மாநகரம் திரைப்படத்தில் கதைக்களம் ஒரு நாள் என்றால், இதில் ஒரே இரவுதான். அடுத்தடுத்த நேரத்தில் நடக்கும் சம்பவங்களை கோர்வையாக்கி விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் திரைக்கதையை உருவாக்கி வெற்றி கண்டார் லோகேஷ். பிகில் திரைப்படத்துடன் வெளியான கைதி, பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட, லோகேஷின் உழைப்பை கவனித்த விஜய் அவருக்கு மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

- Advertisement -

நடிகர் விஜயை இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான கோணத்தில், அவரைக் காட்சிப்படுத்திய லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை தேர்வு செய்தார். ரஜினிக்கு வில்லனாக நடித்து பல்பு வாங்கிய விஜய் சேதுபதி, வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிக்ஸர் விளாசினார். பவானி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அவர், விஜய்க்கு சரியான வில்லனாய் அமைந்ததால் மாஸ்டர் படம் வசூலை அள்ளியது.

இதைத்தொடர்ந்து தனது ஆஸ்தான ஹீரோ கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம் படத்தை எடுத்தார். விஜய் சேதுபதி, பகத் பாசில், கமல்ஹாசன் என மூன்று நடிப்பு அரக்கர்களும் ஒரே படத்தில் இணைய, படத்தின் அவுட்புட் வேற லெவலில் ரீச் ஆகியது. அனிருத்தும் தன் பங்கிற்கு இசையில் நொறுக்க, ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். விக்ரமின் வெற்றிக்கு இன்னொரு மிகப்பெரிய காரணம், கைதி படத்தின் சில விஷயங்களை கொண்டு வந்ததுதான்.

- Advertisement -

கிளைமாக்ஸில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்ட, கமல்ஹாசனின் கேரக்டரும், கார்த்தியின் கதாபாத்திரமும் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து தற்போது விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார். இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்துடன் ஒரு படம் மற்றும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் எடுக்க இருக்கிறார். இப்படி திரைத்துறையில் மிக பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸை சந்தித்ததாகவும், அவரிடம் ஒரு வரியில் கதையை கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது நடிகருக்கும் பிடித்துப் போனதால், விரைவில் இருவரும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்