- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷாவின் வருகையால் மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் முதல்வர் விஜய் - கார் ரேஸ் புகைப்படங்கள்...

திரிஷாவின் வருகையால் மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் முதல்வர் விஜய் – கார் ரேஸ் புகைப்படங்கள் வீடியோக்களால் டிவிகே வினர் அப்செட்!

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தற்போது லண்டனுக்கு தனது அதிகாரிகள் குழுவுடன் சென்றிருக்கிறார். அவர் லண்டனில் நடந்து வரும் கார் ரேஸ் போட்டியை காண நேரில் வந்தார். அப்போது நடிகர் அஜீத்குமாரை விஜயை கட்டியணைத்து வரவேற்றார். அஜீத்குமார் பங்கேற்ற கார் ரேஸ்சை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்த போது விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று கூறி விவாகரத்து கேட்டு இருந்தார். இது தீயாக பரவிய நிலையில் திருமண வரவேற்பு விழாவில் விஜய், திரிஷாவுடன் ஒன்றாக கலந்துக்கொண்டது வைரலானது.

- Advertisement -

அதன்பிறகு தவெக தேர்தல் முடிவுகள் வெளியான போது நடிகை திரிஷா, விஜய் வீட்டுக்கு நேரில் பூங்கொத்துடன் சென்று வாழ்த்துகளை தெரிவித்தார். பிறகு முதல்வராக விஜய் பங்கேற்ற விழாவிலும் முதல் ஆளாக வந்து கலந்துக்கொண்டார். மேலும் சமீபத்தில் கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவிலும் திரிஷா தன் அம்மாவுடன் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.

இப்படி தொடர்ந்து முதல்வர் விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக திரிஷா, விஜயுடன் நெருக்கம் காட்டுவது தவெக கட்சி மூத்த நிர்வாகிகளை முக்கிய அமைச்சர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இந்த சூழலில் சுப்ரமணியபுரம் படத்தில் வரும் தோட்டம் கொண்ட ராசாவே சூடிக்கொண்ட ராசாத்தி பாடல் காட்சியை மீம்ஸ்களாக போட்டு விஜய் திரிஷாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இப்போது லண்டன் சென்ற முதல்வர் விஜய், கார் ரேஸ் காட்சிகளை பார்வையிட்ட போது நடிகை திரிஷாவும் அவருடன் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, மீண்டும் தோட்டம் கொண்ட ராசாவே பாடல் இப்போது டிரண்டிங் ஆகி விட்டது. இது தவெக கட்சியினரை விஜய் ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

அதுவும் இருவரும் ஒரே விதமான கலரில் ஆடை அணிந்து காணப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் விஜய் லண்டனில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றாரா? ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க என்று சொன்ன விஜய், இப்போது மக்கள் வரிப் பணத்தில் தனது தோழி திரிஷாவுடன் கார் பந்தயங்களை ரசிக்க சென்றிருக்கிறாரா என்று கோபமான பதிவுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்