- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட எல் சி யு இந்தப் படத்தோட முடிஞ்சுரும்... முற்றுப்புள்ளிக்கான படத்தை முதல்முறையாக தெரிவித்த லோகேஷ்...

என்னோட எல் சி யு இந்தப் படத்தோட முடிஞ்சுரும்… முற்றுப்புள்ளிக்கான படத்தை முதல்முறையாக தெரிவித்த லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் இதன் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டன. தங்க கடத்தலை மையமாக வைத்தே இதன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சோபின் சபீர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த நிலையில் பேட்டி ஒன்றில், பல்வேறு விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது,

 

கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் எங்கும் அமர மாட்டார். ஓய்வு எடுக்கவே மாட்டார். அவரை திரையில் பார்ப்பதற்கும், திரைக்கு வெளியே பார்ப்பதற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இங்கு அனைவருக்கும் தெரியும் நான் ஒரு மிகப்பெரிய கமல் ரசிகன் என்று. ஒரு கமல் ரசிகன் ரஜினி சாரை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை தான் இதில் காட்டப் போகிறேன்.

 

நான் அவர் படங்களை பார்த்து வளர்ந்தவன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நட்சத்திரங்களும் ஏதோ ஒரு பாடலுக்கு அல்லது கேமியோ ரோலுக்காகவோ பயன்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். ரஜினி சார் இது போன்ற காட்சிகளில் நடித்ததே இல்லை. இதன் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

 

கூலி படத்தில் அமீர்கான் சார் இடம்பெறுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வெளியிடுவது குறித்து தயாரிப்பு நிறுவனமே முடிவு செய்யும். அது வேறு ஒருவராக கூட இருக்கலாம். கொரோனா தொற்று மட்டும் வராமல் இருந்திருந்தால் நான் ரஜினிகாந்த் சாரையும் கமல் சாரையும் வைத்து நிச்சயமாக ஒரு படத்தை எடுத்திருப்பேன்.

 

என்னுடைய அடுத்த இரண்டு திரைப்படங்கள், எல் சி யு கான்செப்ட்டின் ஃப்ரீ கிளைமாக்ஸ் பகுதியாக இருக்கும். அது கைதி 2 மற்றும் ரோலக்ஸ் படங்களாக இருக்கும். பிறகு கிளைமாக்ஸ் நோக்கி ஒரு படம் எடுக்க இருக்கிறேன். இது விக்ரம் 2வாக இருக்கும். அல்லது லியோ 2 ஆக இருக்கும். என்னால் லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியவில்லை என்றால், விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தோடு எல்சியூ வை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சற்று முன்