- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுப்பே பற்ற வைக்கல.. அய்யோ என்னால இருக்க முடியாது ப்பா.. பிக்பாஸிலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை

அடுப்பே பற்ற வைக்கல.. அய்யோ என்னால இருக்க முடியாது ப்பா.. பிக்பாஸிலிருந்து வெளியேறிய பவா செல்லதுரை

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்க் ஒரு வாரம் முடிவடைந்திருக்கிறது. கடந்த சீசன் போல் இந்த சீசன் களைகட்டுமா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு முதல் வாரமே செம கண்டெண்ட்டுகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி பிரதீப்பை ஆள் வைத்து அடித்துவிடுவேன்; நான் அடித்தால் மூக்கு வாய் உடைந்துவிடும் என விஜய் வர்மா சொன்னது; படிப்பு குறித்த பேச்சில் விசித்திராவை ஜோவிகா கடுமையாக பேசியது என பஞ்சாயத்துடனே நகர்கிறது.

நிலைமை இப்படி இருக்க சனி, ஞாயிறில் ஹவுஸ் மேட்ஸுடன் அகம் டிவி வழியே கமல் ஹாசன் பேசினார். சனிக்கிழமை பேசிய அவர் கல்வி குறித்த விசித்திராவின் நிலைப்பாட்டுக்கு சப்போர்ட் செய்கிறாரா இல்லையா என்ற குழப்ப தொனியிலேயே பேசி முடித்தார். அதேபோல் பிரதீப்பிடம் வன்முறையாக பேசிய விஜய் வர்மாவுக்கு நேற்று ஸ்ட்ரைக் கார்டை கொடுத்தார் கமல் ஹாசன்.

- Advertisement -

இதற்கிடையே முதல் வார எவிக்‌ஷனுக்கு பவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப், ஐஷு, ரவீனா, அனன்யா உள்ளிட்டோர் நாமினேஷன் ஆகியிருந்தனர். அநேகமாக யுகேந்திரனோ இல்லை பவா செல்லதுரையோ எவிக்‌ஷன் ஆவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் திடீரென அனன்யா நேற்று எவிக்‌ஷன் ஆனார். இதனையடுத்து வீட்டின் புதிய கேப்டனாக சரவண விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த பவா, விசித்திரா, நிக்ஸன், ரவீனா, யுகேந்திரன் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த கூல் சுரேஷ், பிரதீப், விஜய் வர்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க நேற்று இரவிலிருந்தே வீட்டுக்கு செல்ல வேண்டும் என தனது ஹவுஸ் மேட்ஸிடம் கூறிக்கொண்டிருந்தார் பவா செல்லதுரை.

- Advertisement -

இந்நிலையில் இன்று காலை சீக்கிரமே பவா, யுகேந்திரன், விசித்திரா எழுந்துவிட்டனர். அப்போது யுகேந்திரன் மற்றும் விசித்திராவிடம் பவா செல்லதுரை மணி 8.30 மணி ஆகிடுச்சு. இன்னும் அடுப்பே பத்த வைக்கல. எனக்கு சுகர் வேற இருக்கும். இங்க சாப்பாடு டைமுக்கு கிடைக்க மாட்டேங்குது. பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் இங்கே இருக்கமாட்டேன் என கூறினார்.

அதனையடுத்து தன்னை வெளியேற்றும்படி பிக்பாஸிடமும் கோரிக்கை வைத்தார். சிறிது நேரம் கழித்து அவரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் உங்களை வெளியேற்றுவதற்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கேட்க பவா செல்லதுரையோ உடனடியாக என்னை வெளியேற்றுங்கள். எனக்கு உடல்நிலையும், மனநிலையும் சரியில்லை என்றார். அதன்படி அவர் இன்று வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

சற்று முன்