- Advertisement -
Homeபொழுதுபோக்குவலிய வந்து வாய்ப்பு தந்த நடிகர் சியான் விக்ரம், அலட்சியப்படுத்திய அஜீத் பட இயக்குனர் -...

வலிய வந்து வாய்ப்பு தந்த நடிகர் சியான் விக்ரம், அலட்சியப்படுத்திய அஜீத் பட இயக்குனர் – இப்ப என்ன நடந்துச்சுன்னா… சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தப்படியாக நடிப்பில் அதிக மெனக்கெடுபவர், படத்தில் தான் ஏற்றுக்கொண்ட கேரக்டருக்கு உயிரை கொடுத்த நடிப்பவர் ஒருவர் என்றால் அது நடிகர் சியான் விக்ரம்தான். அவரை போன்ற டெடிகேடிவ் என்பது பல முன்னணி நடிகர்களிடம் பார்க்க முடியாதது. எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் அதற்காக பாடுபட்டு நடிப்பார் விக்ரம்.

உதாரணமாக சேது படத்தில் மன நோயாளியாக அவர் நடிக்க எடுத்துக்கொண்ட சிரத்தை, காசி படத்தில் கண் பார்வையற்றவராக அவர் எடுத்துக்கொண்ட அக்கறை, அந்நியன் படத்தில் அவரது இரண்டு விதமான நடிப்பில் காட்டிய ஆர்வம் என ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் புது பரிமாணம் காட்டியவர் நடிகர் விக்ரம் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

கமர்ஷியல் ஹீரோவாக சாமி தூள் தில் பீமா அருள் போன்ற படங்களில் நடித்த விக்ரம் ஐ பிதாமகன் காசி சேது போன்ற படங்களில் தனது மிக வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். எந்த கேரக்டராக இருந்தாலும் அதனை முழுமையாக உள்வாங்கி சிறப்பான தரமான நடிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகர் விக்ரம் என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய போது, அவரது அடுத்த படத்துக்கான ஒரு வாய்ப்பை தர நடிகர் சியான் விக்ரம் முன்வந்து இருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் மகிழ் திருமேனியிடம் பேச அவர் பலமுறை போனில் முயற்சி செய்திருக்கிறார். டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அஜீத்குமார் படத்தை இயக்கி வந்த மகிழ் திருமேனி, நடிகர் விக்ரம் அழைப்பை கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

விடாமுயற்சி படம் அப்படி ஓடும் இப்படி ஓடும் என்று அஜீத்குமார் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அந்த படம், தியேட்டரை விட்டு ஓடினால் போதும் என்ற நிலமைக்கு வந்துவிட்டது. கமர்ஷியல் ரீதியாக பலத்த தோல்வியை சந்தித்த விடாமுயற்சி படத்தை தந்த இயக்குனர் மகிழ் திருமேனியை இப்போது கண்டுகொள்ள ஆளில்லை.

இதுவரை எந்த தயாரிப்பாளரோ, நடிகரோ அவரது அடுத்த படத்துக்கான வாய்ப்பு தர முன்வராத நிலையில் எந்த வாய்ப்புமின்றி இயக்குனர் மகிழ் திருமேனி சும்மா இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விக்ரமை அவர் தொடர்பு கொண்ட நிலையில் அதே செய்த அதே ஸ்டலைில் இவரை அழைப்பை சியான் விக்ரம் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி இருக்கிறார். பல வெற்றிப் படங்களை தந்த முன்னணி ஹீரோவை அலட்சியப்படுத்தினால், பதிலுக்கு அவரது ரிப்ளையும் அப்படித்தானே இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்