- Advertisement -
அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தாய்க்கிழவி. சிவகார்த்திகேயன் தயாரித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மூதாட்டி கேரக்டரில் நடிகை ராதிகா சரத்குமார் மிக அழுத்தமான சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பொம்பள சிவாஜி என்று ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாய்கிழவி திரைப்படம் கோவாவில் நடைபெறும் 57வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா 2026 பிரிவில் திரையிடப்பட தேர்வாகி உள்ளது.





