இயக்குனர் கே பாக்யராஜிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் பாண்டியராஜன். பிறகு கன்னிராசி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதில் நடிகர் பிரபு நாயகனாகவும் நடிகை ரேவதி நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் கவுண்டமணி சுமலதா ஜனகராஜ் கல்லாப்பட்டி சிங்காரம் என பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஆண்பாவம் நெத்தியடி ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் மனைவி ரெடி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாண்டியராஜன் பாட்டி சொல்லை தட்டாதே கதாநாயகன் என பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 1996ம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான படம் கோபாலா கோபாலா. இந்த படத்தில் குஷ்பு ஜனகராஜ் மணிவண்ணன் சித்ரா என பலர் நடித்திருந்தனர். காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படம் பெரிய வெற்றிப் படமாக இருந்தது.
இயக்குனராக இருந்த மணிவண்ணன் கடந்த 1990களில் நடிகராக மாறினார். பல படங்களில் காமெடி ரோலிலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் அவர் வில்லனாகவும் நடித்த நிலையில் பிஸியான ஒரு நடிகராக இருந்தார். மணிவண்ணன் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்கிற அளவுக்கு நிறைய படங்களில் அவர் நடித்தார்.
இந்நிலையில் பாண்டியராஜன் நடித்த கோபாலா கோபாலா படத்தில் அவரது தந்தையாக மிலிட்டரி ஆபிசர் கேரக்டரில் மணிவண்ணன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் 10க்கும் குறைவான காட்சிகளில் தான் வருவார். எனினும் அவரது கேரக்டரும் படத்தில் பேசும்படியாக தான் இருந்தது. தற்போது அந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கோபாலா கோபாலா படம் உருவான போது மணிவண்ணன் பல படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அவரது கால்ஷீட் இல்லை. எனினும் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டதால் தனது மதிய உணவு இடைவேளை நேரத்தில் வந்து கோபாலா கோபாலா ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டு மணிவண்ணன் நடித்து கொடுத்திருக்கிறார். அப்படி தன் நட்புக்காக நேரம் ஒதுக்கி நடித்து மணிவண்ணன் பாண்டியராஜனுக்கு உதவியவர் என்பது தெரிய வந்துள்ளது.





