- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாக்காரனை மட்டுமே கொண்டாடாதீங்க… சினிமாவை நம்பி நான் இல்லே - வெளிப்படையாக பேசிய இயக்குனர் மாரி...

சினிமாக்காரனை மட்டுமே கொண்டாடாதீங்க… சினிமாவை நம்பி நான் இல்லே – வெளிப்படையாக பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்!

- Advertisement -

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தனுஷ் நடித்த கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து நடிகர் வடிவேலு குணச்சித்திர வேடத்தில் நடித்த மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதுவரை காமெடி செய்த நடிகர் வடிவேலுவை எம்எல்ஏ மாமன்னன் கேரக்டரில் வாழ வைத்திருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். அடுத்து வாழை படமும் நல்ல வெற்றியை மாரி செல்வராஜூக்கு பெற்றுத் தந்தது. அடுத்து அவரது இயக்கத்தில் பைசன் என்ற படம் வெளியாக உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் புத்தக திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது, சினிமா என்பது ஒரு கலை அவ்வளவுதான். நான் இன்னைக்கு இருப்பேன் நாளைக்கு காணாமல் போயிடுவேன். ஒரு படம் ஓடும். ஒரு படம் ஓடாம போயிடும். அப்போ கண்டுக்க ஆளே இருக்காது. இதுதான் உண்மை. ஆனால் பெரிய அரசு அதிகாரிகள் சினிமாவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். அவர்களை நம்பி ஏராளமான மக்கள் இருக்கின்றனர்.

ஆனால் நான் நிலையாக இருப்பேன். ஏனென்றால் சினிமாவை நம்பி நான் இல்லை. என் வாழ்க்கையை நம்பி நான் இருக்கேன். நான் வாசிக்கிறேன். என் படம் ஓடுனாலும் ஓடாமல் போனாலும் நான் தினமும் வாசிச்சிக்கிட்டே இருப்பேன். ஏதாவது ஒண்ணு எழுதிக்கிட்டு இருப்பேன். ஏதாவது ஒண்ணை பண்ணிக்கிட்டு இருப்பேன்.

- Advertisement -

என்னுடைய ஜெனரேசனுக்கு சினிமாவில் இல்லேன்னா பேச்சில் அந்த கருத்தை கடத்துவேன். ஒரு பாட்டில் அதை சொல்வேன். கவிதையில் சொல்வேன். ஒரு சிறுகதையில் கடத்துவேன். இல்லேன்னா நடனமாடி கடத்துவேன். ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒண்ணை நான் பண்ணீட்டே இருப்பேன்.

ஒரு சினிமாக்காரனுக்கு கொடுக்கிற மரியாதையை நீங்க பேச்சாளனுக்கும் கொடுக்கணும். ஒரு கவிஞனுக்கு கொடுக்கணும். எல்லாருக்கும் கொடுக்கணும். சினிமா எல்லாருக்குமே தெரிஞ்சதுனாலே சினிமாக்காரனை மட்டுமே நாம கொண்டாடறோம். தயவு செய்து அதை செய்யாதீங்க. அப்படி பெருமை பெருமையா எங்களுக்குள் வந்து எங்களோட யோசிக்கிற திறமையே போயிடுது.

- Advertisement -

சற்று முன்