நடிகை திரிஷா அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். நயன்தாராவை போலவே, திரிஷாவும் முன்னணி நாயகியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, சர்ச்சையிலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
திரிஷா சினிமாவில் நடிக்க வந்து 23 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதில் 20 ஆண்டுகளில் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். சாமி படத்தில் மாமி கேரக்டரில் நடித்த பிறகு, திரிஷாவின் சினிமா பயணம் வேகம் எடுத்தது. இடையிடையே அவ்வப்போது தொய்வு ஏற்பட்டாலும் கொடி, 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் மீண்டும் கைதூக்கி விடுகின்றன.
கிழக்கு கடற்கரை சாலையில், மதுபோதையில் ஆட்டம், ஆந்திராவில் பாத்ரூமில் குளியல் காட்சி வீடியோ வைரல், விஜய் உடன் திரிஷா நட்பால் அவரது குடும்பத்தில் விரிசல், ஒரு கோடி ரூபாயில் திரிஷாவுக்கு விஜய் வாங்கி தந்ததாக கூறப்படும் நெக்லஸ், லியோ படத்தில் லிப்லாக் காட்சி, மன்சூர் அலிகான் திரிஷா குறித்து ஆபாச பேச்சு என, தொடர்ந்து திரிஷா குறித்த பல சர்ச்சைகள் புயலை கிளப்பின.
இந்த சூழலில் இப்போது கூவத்தூர் பிரச்னை தலைதூக்கி பல விதமான மோசமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் திரிஷா, கருணாஸ் உட்பட சினிமாத்துறையினர் கடும் எதிர்ப்பை கிளப்பினாலும், ஊர் வாயை மூட முடியாது என்பது போல, திரிஷா குறித்த தவறான விமர்சனங்களை மீம்ஸ்களாக வெளியிட்டு, வலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகி நடிகையாக இருப்பவர். இன்னும் திருமணமாகாதவர் என்ற நிலையில், ஒரு பெண் குறித்த விமர்சனம், அதுவும் இதுபோன்ற தரம்கெட்ட அவதூறு விமர்சனம் ஒரு பெண்ணாக, திரிஷாவை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் உணர்ந்திருந்தால், இதுபோன்ற பேச முன்வந்திருக்க மாட்டார்கள்.
சமீபத்தில் திரிஷா விவகாரம் குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின், பெண்களை அவமதிப்பவன் ஆண் மகனே அல்ல. ஒரு நடிகை குறித்து வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி விடாதீர்கள். நான் 2 முறை திரிஷாவை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர் மிகவும் எளிமையான பெண். ஒரு நடிகையை உங்கள் காதலியாக கூட நினைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதிலும் ஒரு கண்ணியம் வேண்டும் என்று கூறியிருக்கிறார் மிஷ்கின்.





