- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மகள் திவ்யாவுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சத்யராஜ் - ஏஸி ரூம்ல உட்கார்ந்து என்ன...

தனது மகள் திவ்யாவுக்கு ஆதரவாக பேசிய நடிகர் சத்யராஜ் – ஏஸி ரூம்ல உட்கார்ந்து என்ன வேணா பேசுவீங்களா? விளாசித் தள்ளிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு நேர்காணலில் பேசும்போது, திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. நான் திருமண சடங்குகளை வெறுக்கிறேன். தாலி கட்டாமலேயே விரும்பிய ஆணுடன் அவரவர் வீட்டில் வாழ்ந்து கொள்ளலாம் என்று பேசியிருந்தார்.

திவ்யா சத்யராஜின் இந்த கருத்துகளுக்கு பலரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். திருமண வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்துக்கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்த இஷ்டமில்லாமல் இப்படி சமூக சீர்த்திருத்தம் என்ற பெயரில் திவ்யா சத்யராஜ் தாறுமாறாக பேசுகிறார் என்று பலரும் அவரது பேச்சை கண்டித்தனர்.

- Advertisement -

அதே நேரத்தில் நடிகர் சத்யராஜ் தனது மகளின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதாகவும் அவரது பேச்சுக்கு ஒத்துப் போவதாகவும் உடன்படுவதாகவும் கூறி, நான் ஒரு பெருமைக்குரிய பெரியாரிஸ்ட். எனக்கும் திருமணம் ஜாதி மதம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை, திருமணம் அவரவர் விருப்பம் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பேசியிருந்தார்.

இதுகுறித்து பழைய வண்ணாரப்பேட்டை திளெரபதி திளெரபதி 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, சத்யராஜ் சார் நீங்கள் ஒரு பெரியாரிஸ்ட் என்பது 90களில் பிறந்தவர்களுக்கு தெரியும். ஆனால் ஜென்ஸிகளுக்கு நீங்க பெரியாரிஸ்ட் என்று தெரியாது. பெரியாரின் கொள்கை என்ன என்று கூட தெரியாது. அப்படி இருக்கும்போது நீங்களும் உங்களுடைய மகளும் சொன்ன கருத்து தப்பானது.

- Advertisement -

லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை தவறு இல்லை, தாலி மோதிரம் போன்ற எந்த சடங்குகள் இல்லாமல் பெற்றோர் சம்பந்தம் இன்றி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்வதும் தவறல்ல என்று சொல்லி இருக்கிறீர்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் ஏஸியில் உட்கார்ந்து கொண்டு எது வேண்டுமானாலும் பேசலாம். உங்களுக்கு பேங்க் பேலன்ஸ் இருக்கு, சொத்து இருக்கு என்பதால் இதெல்லாம் உங்களுக்கு சாத்தியம்.

ஆனால் சாதாரண மக்களுக்கு இது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி விடும். திருமணம் இல்லாமல் உறவில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டு பின் பிரிவு ஏற்பட்டால் அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை அந்த நிலையை எதிர்கொண்ட பெண்களிடம் கேட்க வேண்டும். இளைஞர்களே தயவுசெய்து இதுபோன்ற பேச்சைக் கேட்டு பாதை மாறி விடாதீர்கள் என்று அந்த வீடியோவில் மோகன்ஜி பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்