நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் போற்றப்படும் ஒரு கலைஞனாக இருக்கிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். அவரது நடிப்பில் அடுத்து தக்லைப் படம் வெளிவர இருக்கிறது. தனது 237வது படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார்.
சினிமா பயணத்தில் பல சிகரங்களை தொட்ட நடிகர் கமல்ஹாசன், சொந்த வாழ்க்கையில் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். வாணி என்பவரை முதல் திருமணம் செய்த கமல், அவரை விட்டு விலகி பிறகு சரிகா என்ற குஜராத்தி நடிகையை திருமணம் செய்தார்.
கமல் சரிகா தம்பதிக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் என 2 மகள்கள் உள்ளனர். ஒரு கட்டத்தில் சரிகாவையும் பிரிந்த கமல், நடிகை கௌதமியுடன் பல ஆண்டுகள் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினார். பின்னர் அவரையும் விட்டு விலகினார். பிறகு ஆண்ட்ரியா, சிம்ரன், பூஜாகுமார் உள்ளிட்ட சில நடிகைகளுடன் அவர் நெருக்கமான நட்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நடிகர் கமல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அவரால் முன்னணி நடிகையாக புகழ் பெற முடியவில்லை. அதனால் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் அவர் நடிப்பதால் பல ஆண்டுகளாக மும்பையில் தனிமையில் வசிக்கிறார். இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறுகையில், கமல் – சரிகா போன்றவர்கள் பெற்றோராக இருப்பது எனக்கு பெருமைதான். ஆனால் என் தந்தையில் புகழ் எனக்கு பல நேரங்களில் சுமையாக இருந்திருக்கிறது. பலரும் என்னை கமல் மகள் என்றுதான் குறிப்பிட்டார்கள். எனக்கு தனியாக அடையாளம் வேண்டும் என்று நான் நினைப்பேன். அது தடையாக இருந்தது.
அதனால்தான் என் அப்பா, அம்மா பிரிவுக்கு பிறகு நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன். என் அப்பாவும், அம்மாவும் பிடிவாதமான நபர்களாக இருந்தார்கள். அது என்னையும், என் தங்கையையும் மிகவும் பாதித்தது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். மகள்களின் எதிர்காலம், நன்மை கருதி தனது பெற்றோர் சேர்ந்து வாழாமல் பிடிவாதமாக பிரிந்துவிட்டதையே ஸ்ருதிஹாசன் வருத்தமாக தெரிவித்துள்ளார்.





