- Advertisement -
Homeபொழுதுபோக்குதனி ஒருவன் 2 ... தளபதிக்காக டபுள் ஆக்ஷன் ஸ்கிரிப்ட்... வேற லெவலில் தளபதிக்காக கதைக்களம்...

தனி ஒருவன் 2 … தளபதிக்காக டபுள் ஆக்ஷன் ஸ்கிரிப்ட்… வேற லெவலில் தளபதிக்காக கதைக்களம் அமைக்கும் மோகன் ராஜா…

- Advertisement -

எடிட்டர் மோகனின் மூத்த மகனான மோகன் ராஜா, ஹனுமன் ஜங்ஷன் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே, மலையாள திரைக்காவியமான தென்காசி பட்டினத்தை ரீமேக் செய்து அவர் எடுத்திருந்தார். இதன்பிறகு, தனது தம்பி ரவியை கதாநாயகனாக்க முடிவெடுத்த அவர், மீண்டும் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து இயக்கினார்.

ஜெயம் எனும் பெயரில் வெளிவந்த இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காதலை மாறுபட்ட கதைகளத்தில் சொல்லியதால் படத்திற்கு வரவேற்பு கூட, ரவியை அனைவரும் ஜெயம் ரவி என்றே அழைக்க ஆரம்பித்தனர். இந்த திரைப்படத்தின் மூலம், இயக்குனராகவும் மோகன் ராஜா கவனம் பெற்றார்.

இதன்பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை, தனது தம்பியை கதாநாயகனாக வைத்துக் கொடுத்து புகழ் பெற்றார் மோகன் ராஜா. அதேசமயம் அவர் தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்குவதாக கூறிய சிலர், அவரை ரீமேக் ராஜா என்று அழைத்து வந்தனர்.

இருப்பினும் ரீமேக் படத்தை வெற்றி திரைப்படமாக மாற்றும் யுக்தி அவருக்கு தெரிந்திருப்பதாகவும் சிலர் கருத்து கூறினர். இதனிடையே தொடர்ந்து ஐந்து திரைப்படங்களுக்கு பிறகு, ஹீரோவை மாற்றிய அவர் விஜய்யை வைத்து வேலாயுதம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதன்பிறகு எழுத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், முதல் முறையாக தனது சொந்தக் கதையை கொண்டு படத்தை உருவாக்கினார். தனது தம்பி ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் தனி ஒருவனாக உருவெடுத்த இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. நடிகர் அரவிந்த்சாமிக்கு கம் பேக் ஆக அமைந்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இந்த நிலையில் தற்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் மோகன் ராஜா. வரும் 28 ஆம் தேதி தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார்.

மேலும் விஜய்க்கும் மூன்று கதைகளை தயார் செய்து வைத்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், நடிகர் விஜய்க்கு இரட்டை வேடங்களில் ஒரு கதையை தயார் செய்தேன். அப்போது தடம் படம் வெளியாகி இருந்தது. என் கதைக்கும் அந்த படத்திற்கும் சில விஷயங்கள் ஒத்துப் போனதால் அதை அப்படியே விட்டு விட்டேன். இப்போது அந்தக் கதையை மாற்றி அமைத்துள்ளேன். இது போக நடிகர் விஜய்க்கு இரண்டு கதையை வைத்திருக்கிறேன். விரைவில் இருவரும் சேருவோம் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.

சற்று முன்