- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மீது செருப்பை எறிந்தால் இனிமேல் இப்படி செய்யுங்க, மன்னிப்பு கேட்பது போல் தன்னை விமர்சித்தவர்களை...

என் மீது செருப்பை எறிந்தால் இனிமேல் இப்படி செய்யுங்க, மன்னிப்பு கேட்பது போல் தன்னை விமர்சித்தவர்களை கலாய்த்த மிஷ்கின் – இதுதாங்க குசும்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மிஷ்கின். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் சைக்கோ அஞ்சாதே நந்தலாலா போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. மாவீரன் லியோ நந்தலாலா சவரக்கத்தி போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

இயக்குனராக நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்த மிஷ்கின், இசையமைப்பாளராகவும் மாறி இருக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் டிரெயின் என்ற படம் உருவாகி உள்ளது. வருகிற மே மாதம் இந்த படம் திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் மிஷ்கின் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். அப்போது மேடை நாகரிகமின்றி சில விஷயங்களை வெளிப்படையாக பேசுகிறார். சமீபத்தில் பாலா 25 விழாவில் பங்கேற்ற மிஷ்கின், இயக்குனர் பாலாவை அவன் இவன் என்று மரியாதையின்றி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

அதே போல் பாட்டல் ராதா விழாவில் பங்கேற்ற மிஷ்கின், இயக்குனர்கள் வெற்றிமாறன் பா ரஞ்சித் அமீர் லிங்குசாமி முன்னிலையில் இளையராஜாவை மரியாதையின்றி குறிப்பிட்டு பேசினா். பல ஆபாச வார்த்தைகளையும் பேசினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்த நிலையில், அதற்கு மிஷ்கின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, என்மீது செருப்பை எறிய வேண்டும் என்று சொன்ன ஒரு நண்பர், தயவு செய்து அதை ரெண்டு செருப்பா எறிங்க. அதுவும் 8ம் நம்பர் செருப்புகளா எறிங்க, அதுதான் என் கால் சைஸ். அவருக்கும் என் மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு மனிதர் 18 வருஷமா என்னை திட்டீட்டே இருக்கிறார். இன்னும் 10 வருஷம் நான் படம் பண்ணினால் என்னை திட்டுவார். அவருக்கும் என் மன்னிப்பை கேட்டுகிறேன், என்று மிஷ்கின் பேசியிருக்கிறார். மன்னிப்பு கேட்பதை கூட குசும்பாக பேசி தன்னை விமர்சித்தவர்களை கலாய்த்திருக்கிறாரே மிஷ்கின் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

சற்று முன்