- Advertisement -
Homeபொழுதுபோக்குபாட்டு நிகழ்ச்சிக்கு நடுவரான போன இயக்குனர் மிஷ்கின்… ஏடாகூடமா நடந்து கொண்டதால் நொந்து போன டீம்...

பாட்டு நிகழ்ச்சிக்கு நடுவரான போன இயக்குனர் மிஷ்கின்… ஏடாகூடமா நடந்து கொண்டதால் நொந்து போன டீம் – என்ன ப்ரோ இதெல்லாம்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின் இருந்து வருகிறார். சித்திரம் பேசுதடி படத்தில் துவங்கி அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ போன்ற படங்களை இயக்கி உள்ளார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் ரிலீஸாக உள்ளது. சவரக்கத்தி மாவீரன் லியோ டிராகன் பல படங்களில் மிஷ்கின் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் இப்போது சூப்பர் சிங்கர் என்ற பிரபலமான நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் 4 நடுவர்களில் ஒருவராக இயக்குனர் மிஷ்கினும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்சசியில் அவர் நடுவராக இருப்பது பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் இயக்குனர் மிஷ்கின் வித்யாசமான மனிதர் என்பது மட்டுமின்றி எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பேசிவிடும் ஒரு முரண்பட்ட மனிதராகவும் பார்க்கப்படுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இருக்கையில் உட்காருவதே கோணல் மாணலாகவும் சரிந்தும் படுத்தபடியும் இருந்ததால் படக்குழு கேமரா ஆங்கிள் வைக்க முடியாமல் திணறியுள்ளது.

இதில் மேடையில் பாடிய சிறந்த பாடகர்களை தேர்வு செய்வதை விட்டுவிட்டு அந்த பாடலுக்கு நடனமாடிய பெண்களில் ஒருவரை சிறந்தவர் என்று பாராட்டி இருக்கிறார் இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியின் நடுவர் மிஷ்கின். அந்த பெண் கிளம்பி சென்ற நிலையில், அந்த பெண்ணை உடனடியாக நிகழ்ச்சிக்கு மீண்டும் அழைத்து வாருங்கள் என்று கூறி அட்ராசிட்டி செய்திருக்கிறார். அந்த பெண் மீண்டும் வரவழைத்த நிலையில், மேடையில் அவரை மிஷ்கின் பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது பாட்டு நிகழ்ச்சி, இதில் பாட்டுக்கு நடனமாடியவரை நடுவர் மிஷ்கின் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறாரே என மற்ற 3 நடுவர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் குழம்பி போயிருக்கின்றனர். அந்த பெண்ணிடம் நடன பயிற்சி பள்ளியில் உன்னை நான் சேர்த்து விடுகிறேன் என்றும் அதற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் மிஷ்கின் அந்த மேடையில் அறிவித்திருக்கிறார்.

மிஷ்கின் பிரபல இயக்குனர் மட்டுமின்றி பாடகர் இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதனால்தான் இந்த பிரபலமான பாடல் போட்டி நிகழ்ச்சிக்கு அவரை நடுவராக பங்கேற்க செய்தனர். ஆனால் இவர் செய்யும் அலப்பறையை பார்த்த டிவி நிர்வாகம், இது என்னடா வம்பா போச்சு, பாட்டு போட்டி நிகழ்ச்சியை வேற மாதிரி கொண்டு போறாரே என்றும் புலம்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்