- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பத்திரமா வெச்சிருக்கிறது அதுதான், வெற்றிமாறன் ராம் பா ரஞ்சித் எல்லாம் அதையே தான் பண்றாங்க...

என்னை பத்திரமா வெச்சிருக்கிறது அதுதான், வெற்றிமாறன் ராம் பா ரஞ்சித் எல்லாம் அதையே தான் பண்றாங்க – இயக்குனர் மிஷ்கின் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். முதல் படமே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே பிசாசு துப்பறிவாளன் சைக்கோ உள்ளிட்ட படங்கள் அவரை நட்சத்திர இயக்குனராக மாற்றியது. ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறி மிஷ்கின் அசத்திக் கொண்டு இருக்கிறார்.

தமிழ் திரையுலகம் சார்ந்த பலரும் தீவிர வாசிப்பாளர்களாக இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். எப்போதுமே அவரிடம் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. படப்பிடிப்பு ஷாட் இடைவேளை நேரங்களில் கூட புத்தகங்கள் வாசிப்பது அவரது வழக்கமாக உள்ளது. வாசிப்பில் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்ட மிஷ்கின் வாசிப்பது குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, நமக்கு வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்குது. நீங்க அந்த நேரத்துல ஒரு நல்ல புஸ்தகத்துல ஒரு 10 பக்கங்கள் மட்டும் படிச்சீங்க என்றால் இந்த மாதிரி கவலை எல்லாம் வரவே வராது.

எனக்கு இன்னிக்கு வந்து சாப்பிட காசு இல்லே என்கிட்ட எதுவுமே இல்லே என்றாலும் என்கிட்ட ஒரு புஸ்தகத்தை கொடுத்தா உட்கார்ந்து படிக்க ஆரம்பிச்சுடுவேன். எல்லா நேரத்துலேயும் என்னை புத்தகங்கள் பத்திரமா வெச்சிருந்தது. லைஃப்பை கத்துக்கணும்ன்னு ஒரு விஷயம் அதுல நான் கத்துக்கிட்டேன்.

- Advertisement -

இப்போ நான் ஒரு புத்தகம் படிச்சிட்டு இருக்கேன். அந்த புத்தகம் பேர் சொல்ல மாட்டேன். அப்படி நான் சொன்னா உடனே போய் அதை வாங்கி படிப்பாங்க. அப்படி படிச்சா அது புரியாது. அதை தேடணும். அந்த புத்தகத்தை தேடிப் போய் படிக்கணும். அவனுக்கு தான் அந்த புத்தகம் படிச்சா புரியும்.

வெற்றிமாறன் அப்படித்தான். படிச்சிட்டே இருக்கிறான். ராமும் அப்படித்தான். எப்பவும் படிச்சிட்டே இருக்கான். மிஷ்கின் படிச்சிட்டே இருக்கான். ரஞ்சித் படிச்சிட்டே இருக்கான். அப்படி படிச்சிட்டே இருக்கும் போது என்கிளோடிவ் ஆகுது. அவனுக்கு தெரியுது. அவன் யாருன்னு. நீ யாரு நீ யாருன்னு அந்த புத்தகம் சொல்லுது என்று இயக்குனர் மிஷ்கின் அந்த நேர்காணலில் வாசிப்பின் மகத்துவம் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்