- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம் பிடிச்சா கொண்டாடுங்க, இல்லேன்னா விமர்சனம் செய்யுங்க - பட விழாவில் ஓபனாக பேசிய...

இந்த படம் பிடிச்சா கொண்டாடுங்க, இல்லேன்னா விமர்சனம் செய்யுங்க – பட விழாவில் ஓபனாக பேசிய இயக்குனர் மிஷ்கின்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் யூத் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் மிஷ்கின். அப்போது அவரது பெயர் சண்முகசுந்தரம். அதன்பிறகு இயக்குனர் மிஷ்கின் என்ற பெயரில் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து துப்பறிவாளன் சைக்கோ அஞ்சாதே போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தார்.

மேலும் சவரக்கத்தி மாவீரன் பரிமளம் அண்ட் கோ லியோ வணங்கான் டிராகன் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபகாலமாக படங்களை இயக்குவதை காட்டிலும் படங்களில் நடிப்பதில் மிஷ்கின் ஆர்வமாக உள்ளார். மேலும் பட விழாக்களில் எப்போதுமே வெளிப்படையாக ஜாலியாக பேசுவது மிஷ்கினின் வழக்கமாக உள்ளது.

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நாசர் உள்ளிட்ட பலர் நடித்த படம் டிரெயின். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். மேலும் அவரே திருநங்கை குறித்தும் ஒரு பாடலை சொந்த குரலில் பாடி இருக்கிறார்.

இந்த பட விழாவில் முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் தாணு, டிரெயின் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்தார். விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, நான் இயக்கிய பிசாசு 2 படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படமும் தாமதமாகி உள்ளது. ஆனாலும் நான் பொறுமையாக காத்திருப்பேன்.

- Advertisement -

எனக்கு தயாரிப்பாளரின் கஷ்டம், என்ன நடக்கிறது என்பது தெரியும். விஜய் சேதுபதி ஒரு எரிமலை. ஒரு ஆடிஷனில் அவரை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சைக்கோ படம் பார்த்துவிட்டு அவர் என்னிடம் பேசினார். நாங்கள் இந்த படத்தை தொடங்கினோம். ஸ்ருதிஹாசன் இதில் ஒரு பாடலை பாடி கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். பெரியவர் கமல்ஹாசன் உடன் நான் நடிக்க முடியவில்லை.

அவரை வைத்து படம் இயக்கவில்லை. அவர் மகளுடன் நடித்து விட்டேன். எனக்கு பிடித்த நாசரும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிடித்திருந்தால் கொண்டாடுங்கள். பிடிக்காவிட்டால் விமர்சனம் செய்யுங்கள் என்று விழாவில் பேசினார். நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், மிஷ்கினை நான் முதலில் சைக்கோ என்று நினைத்தேன். ஆனால் சைக்கோ படம் பார்த்துவிட்டு அவர் ரசிகர் ஆகிவிட்டேன் என்று ஜாலியாக பேசினார்.

- Advertisement -

சற்று முன்