- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியா அந்த கேரக்டரில் நடிக்கப் போறது இந்த நடிகை தான் - அப்பாடா, ஒரு வழியா...

கடைசியா அந்த கேரக்டரில் நடிக்கப் போறது இந்த நடிகை தான் – அப்பாடா, ஒரு வழியா பிரச்னை முடிவுக்கு வந்துடுச்சு – நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய் படக்குழுவினர்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக, புன்னகை அரசி சினேகா நடிக்கிறார். மற்றொரு விஜய்க்கு மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். சென்னை, ஐதராபாத், துருக்கி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக இலங்கைக்கு ஷூட்டிங் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் விஜய் நடிக்கிறார். அந்த படத்துடன் தனது சினிமா பயணத்துக்கு டாடா சொல்லிவிட்டு, அடுத்து அரசியல் களத்தில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறார். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரை அறிவித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் பிரமாண்டமான கட்சி மாநாட்டை நடத்தவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

இப்போது நடித்து வரும் கோட் படத்தில், விஜய் இரட்டை ரோலில் நடிக்கிறார். அப்பா மகன் என்ற இரண்டு பேரில், அப்பாவின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் மைக் மோகன் நடிக்கிறார். அவருக்கு இந்த படத்தில் வில்லன் ரோல் தரப்பட்டுள்ளது. கஞ்சா கருப்பு, சுதீப், ரம்யா கிருஷ்ணன், கனிகா, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி என பல நடிகர், நடிகையர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே இந்த படத்தில் விஜய்க்கு தங்கை கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு, படம் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே நடந்து வருகிறது. இதில் முதலில் நடிகை இவானா நடிக்க கமிட் செய்யப்பட்டார். ஆனால், ஹீரோயினாக தனக்கு வாய்ப்புகள் வருகிற சூழலில், விஜய்க்கு தங்கையாக நடித்தால் அப்புறம் தங்கை நடிகையாக மாறி விடுவேன் என அவர் மறுத்துவிட்டார். ஆனால் இந்த கேரக்டர் வெயிட்டான ரோலாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

அதன்பின்பு மாளவிகா ஷர்மா என்ற நடிகை, விஜய்க்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவரும் மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதன்பிறகு இப்போது விஜய்க்கு தங்கை கேரக்டரில் நடிக்க மாடலிங் துறையை சேர்ந்த நடிகை அபியுக்தா கமிட் செய்யப்பட்டுள்ளார். அவர் நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அவர் முழுமனதுடன் சம்மதித்து விட்டதால், அப்பாடா என பெருமூச்சுவிடுகின்றனர் கோட் படக்குழுவினர்.

- Advertisement -

சற்று முன்