- Advertisement -
Homeபொழுதுபோக்குநின்று போன வேட்டை மன்னன் ஷூட்டிங்கை, மீண்டும் கையில் எடுப்பாரா நெல்சன்?... இயக்குனர் அளித்த நச்...

நின்று போன வேட்டை மன்னன் ஷூட்டிங்கை, மீண்டும் கையில் எடுப்பாரா நெல்சன்?… இயக்குனர் அளித்த நச் பதில்…

- Advertisement -

தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தோல்விகளைக் கண்ட ரஜினிகாந்திற்கும், பீஸ்ட் படத்தால் பலராலும் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட இயக்குனர் நெல்சனுக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி, தம்மன்னா என பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது.

ரஜினிக்கு மட்டுமல்லாமல் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோருக்கும் கச்சிதமான மாஸ் காட்சிகளை நெல்சன் வைத்ததால் இந்தத் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் மாபெரும் வெற்றியை கண்டது. இதுவரைக்கும், 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஜெயிலர் திரைப்படம் வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ஜெயிலர் வெற்றியின் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் பிஸியாகி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஜெயிலரின் வெற்றி, பீஸ்ட் படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனம் மற்றும் வேட்டை மன்னன் திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். இதில் ஜெய், ஹன்சிகா மோத்வானி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால் சில பிரச்சனைகளால் அதன் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் நெல்சன்,

- Advertisement -

“நடிகர் சிம்புவுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிய சமயத்தில் சிம்புவை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணி புரியலாம் என்று கூறினார். ஆனால் சில பிரச்சினைகளால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது அந்த நாட்களை விட எனக்கு கொஞ்சம் முதிர்ச்சி வந்து விட்டதாக கருதுகிறேன். இதனால் இப்போது அந்த படத்தில் சில குறைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பீஸ்ட் பட தோல்வி குறித்து அவர் பேசுகையில், “பீஸ்ட்க்கு கிடைத்த கலவையான விமர்சனம் என்னை முதல் நான்கு நாட்களில் மிகவும் பாதித்தது. இதனால் ஒவ்வொரு நாளும் விஜய் நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிய, அவரே என்னிடம் செல்போனில் மூலம் தொடர்பு கொள்வார். நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே விஜய்க்கு மிகப்பெரிய ரசிகன். அவருடன் சேர வேண்டும் என்கின்ற என்னுடைய கனவு, பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் நனவாகிவிட்டது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்