- Advertisement -
Homeபொழுதுபோக்குகலாம் வாழ்க்கையை திரைப்படமாக்குவது குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் ஓம் ராவத் - அந்த மேட்டரை...

கலாம் வாழ்க்கையை திரைப்படமாக்குவது குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் ஓம் ராவத் – அந்த மேட்டரை பத்தி ஒண்ணும் சொல்லலையே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது தலைவர்கள் திரை நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் என பிரபல மனிதர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்குவது டிரண்டிங் ஆகி விட்டது. ராக்கெட்ரி என்ற படத்தில் மூலம் அம்பியின் விளைவு என்ற படத்தில் நடிகர் மாதவன் நடித்தார். அவரே இயக்கியிருந்தார். இந்த படம் இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையாக இருந்தது. இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது நடிகர் மாதவன், கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை கதை படத்தில் இப்போது நடித்து வருகிறார். அடுத்ததாக நடிகர் தனுஷ் இளையராஜா வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார். 2 பாகங்களாக இந்த படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி என்ற படமாக வெளியானது. இதில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரெனாவத் நடித்திருந்தார்.

- Advertisement -

இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கதை திரைப்படமாக உருவாகிறது. பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் படத்தை இயக்கிய இயக்குனர் ஓம் ராவத் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். ஏஏ ஆர்ட்ஸ் ஏகே எண்டர்டெயின்மென்ட் மற்றும் டி சிரீயஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கலாம் தி மிசெல் மேன் ஆப் இந்தியா என்ற பெயரில் இந்த படத்தை தயாரிக்கிறது.

கலாம் பயோபிக் படம் குறித்து இயக்குனர் ஓம் ராவத் கூறியதாவது, கலாம் வாழ்க்கை கதையை திரைக்கு கொண்டு வருவது என்பது கலைக்கு இருக்கும் சவால் மற்றும் தார்மீக கலாச்சார பொறுப்பு. இது உலகளாவிய இளைஞர்களுக்கு குறிப்பாக தென்னகத்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கதை. யாராக இருந்தாலும் அவர்களுக்கான அற்புதமான பாடம் கலாமின் வாழ்க்கை என்று இயக்குனர் ஓம் ராவத் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மக்கள் ஜனாதிபதி என்று கொண்டாடப்பட்ட ஏபிஜே அப்துல்கலாம் ஒரு உன்னதமான மனிதர். சிறந்த பண்பாளர். பிரம்மசரிய வாழ்க்கையை கடைபிடித்தவர். ஒழுக்க சீலராக அவரது வாழ்க்கை மிகவும் போற்றுதலுக்கு உரியது. குறிப்பாக மாணவ மாணவியர் மத்தியில் எழுச்சி உரை பலமுறை ஆற்றியவர். இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற கனவை இளைஞர்கள் மனதில் விதைத்தவர்.

அப்படிப்பட்ட மாமனிதரின் வாழ்க்கை கதையில் நடிகர் தனுஷ் நடிப்பது ரசிகர்களின் பலருக்கும் அதிருப்தியை தந்திருக்கிறது. ஏனெனில் பல நடிகைகளுடன் கிசுகிசு சொந்த வாழ்க்கையில் விவாகரத்து என பல சர்ச்சைகளில் சிக்கியவர். பல விமர்சனங்களில் பேசப்பட்டவர். அவரை கலாம் படத்தில் கதாநாயகனாக்கியது ஏன் என்பது பற்றி இயக்குனர் ஓம் ராவத் ஒண்ணும் பேசலையே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்