- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று விசாரணைக்கு வந்த நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு - நடந்தது...

இன்று விசாரணைக்கு வந்த நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு – நடந்தது என்ன தெரியுமா? அப்போ ரஜினிக்கு இது இரட்டிப்பு சந்தோஷ தீபாவளிதான் போல…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் என பிறமொழி படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தனுஷ். சமீபத்தில் அவரது இயக்கத்தில், நடிப்பில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அடுத்து நடிகர் தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்திருக்கிறார், இதைத் தொடர்ந்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிக்க உள்ளார். இதற்கிடையே இட்லிக்கடை என்ற படத்தை அவர் டைரக்ட் செய்து வருகிறார். தேனி மாவட்டத்தில் முதல்கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. மேலும் அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

- Advertisement -

தமிழில் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ், தனுஷை பிரிவதாக ஐஸ்வர்யா இருவரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து இருவருமே தங்களுக்கு திருமணம் செல்லாது என அறிவித்து தங்களது திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்குமாறு சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் 6 மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த விவகாரம் தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் சில ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி இவர்களது விவாகரத்து வழக்கு, சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், அக்டோபர் 7ம் தேதிக்கு அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இம்மாதம் 7ம் தேதி இருவருமே வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை, 19ம் தேதிக்கு ( இன்று) ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று சென்னை குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் இன்று நடந்த வழக்கு விசாரணைக்கும் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த விவாகரத்து வழக்கு குறித்த விசாரணையை வரும் நவம்பர் 2ம் தேதிக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி சுபா தேவி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இப்படி தொடர்ந்து தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே வழக்கு விசாரணைக்கு நேரில் வராமல் தவிர்க்கின்றனர். அதனால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்