- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பையில் டைரக்டர் அட்லியின் புதிய அலுவலகத்தின் மதிப்பை சொன்னா சிலருக்கு தூக்கமே வராது- அடுத்து அவர்...

மும்பையில் டைரக்டர் அட்லியின் புதிய அலுவலகத்தின் மதிப்பை சொன்னா சிலருக்கு தூக்கமே வராது- அடுத்து அவர் இயக்கும் படத்திற்கு வாங்கப் போகும் சம்பளம்… தலை சுத்துதே?

- Advertisement -

இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானவர். இயக்குநர் அட்லி, பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஆனால் இப்போது குருவை மிஞ்சிய சிஷ்யனாக இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநர் என்ற இடத்தை பிடித்துவிட்டார் என்றால் அது மிகையல்ல.

ராஜா ராணி படத்தில் ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா, ஜெய் ஆகியோரின் காதலை மையப்படுத்தி, உணர்வுபூர்வமான ஒரு படமாக தான் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றியை பெற்றது. இதில் நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை எடுத்தார் அட்லி. அண்ணன் விஜய் என்று அழைக்கும் அட்லிக்கு, தொடர்ந்து தனது படங்களை இயக்கும் வாய்ப்பு தந்து, அவரை ஒரு நல்ல உயரத்துக்கு உயர்த்தி விட்டவர் விஜய் என்றால் அது மிகையல்ல. அதே நேரத்தில் விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் போன்ற மாஸ் கேரக்டர் படங்களை கொடுத்து அவருக்கும் நல்ல ஒரு மாஸ் கொடுத்தவர் அட்லி என்பதையும் மறுக்க முடியாது.

இதைத்தொடர்ந்து ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. பதான் படம் மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, துவண்டு இருந்த இந்தி படவுலகில் புத்துயிர் அளிக்கும் விதமாக பதான் படத்தை தந்திருந்தார் ஷாருக்கான். அதனால் அட்லி இயக்கும் ஜவான் படம் அதைவிட மாஸ் ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அட்லி இயக்கிய ஜவான் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி போன்ற நம்ம ஊர் நட்சத்திரங்களும் நடித்தனர். 23 படங்களில் காப்பி என கிண்டலடிக்கப்பட்ட ஜவான் படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்து அட்லி இப்போது வேற லெவலில் பார்க்கப்படும் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள இயக்குநராக மாறிவிட்டார். முகேஷ் அம்பானி வீட்டு விசேஷங்களில் சிறப்பு விருந்தினராக அட்லி, பிரியா பங்கேற்கும் அளவுக்கு அவரின் ரேஞ்சே மாறிப் போய்விட்டது.

இந்நிலையில், தனது அடுத்த படத்துக்கான ஆயத்தப்பணிகளில் அட்லி ஈடுபட்டுள்ளார். இதற்கான அவர் ரூ. 40 கோடி மதிப்பிலான புதிய அலுவலகம் ஒன்றை மும்பையில் திறந்துள்ளார். மேலும், அடுத்த படத்தை இயக்கும் அட்லியின் சம்பளம் ரூ. 100 கோடி எனவும் முடிவு செய்யபப்ட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் 100 கோடி சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் அட்லி 3வது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகுபலி இயக்குநர், காந்தாரா இயக்குநர் ஆகியோரை தொடர்ந்து அட்லிக்கு 3வது இடம் அதில் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்