தமிழ் சினிமாவில் 1980 90களில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே பாக்யராஜ். இயக்குனர் பாரதிராஜாவின் சீடர். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் பாண்டியராஜன். அவர் முதன்முறையாக இயக்கிய படம் கன்னி ராசி. தொடர்ந்து ஆண்பாவம் பாட்டி சொல்லை தட்டாதே மனைவி ரெடி நெத்தியடி என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் கன்னிராசியில் பிரபுவின் அக்கா மகளாக ரேவதியும் தாய் மாமாவாக ரேவதியும் நடித்திருந்தனர். கல்லாப்பட்டி சிங்காரம் கவுண்டமணி ஜனகராஜ் சுமலதா வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஜாதக தோஷத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கதையாக இந்த படம் வெற்றி பெற்றது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் கூறியதாவது, இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த நான் இயக்குனராக அறிமுகமான முதல் படம் கன்னி ராசி. இந்த படத்தில் பிரபு நாயகனாகவும், ரேவதி நாயகியாகவும் நடித்திருந்தனர். என்னை நம்பி என் முதல் படத்தில் நடிக்க சம்மதித்த பிரபுவுக்கு நான் கோவில் கட்டி கும்பிடணும்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபு நடிக்கும் காட்சிகளில் ஏதேனும் சொதப்பினால், காட்சி நான் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால், நான் உடனே என்ன பண்றீங்க என்று கத்துவேன். கண்டபடி திட்டுவேன். பிரபு அப்போதே ஸ்டார் நடிகராக இருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன், பெரிய வீட்டுப் பையனாக இருந்தார்.
ஆனால் இயக்குனராக இருந்த நான் அதை எல்லாம் யோசிக்கவே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் இங்கிதம் இல்லாமல் சத்தம் போடுவது, திட்டுவது என்று நான் தாறுமாறாக நடந்துக்கொண்டேன். ஒருமுறை பிரபு என்னை தனியாக அழைத்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏதாவது தவறு நடந்தால் என்னை தனியாக அழைத்து அமைதியாக சொல்லுங்கள்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நீங்கள் நானும் மட்டும் இல்லை. நூற்றுக்கணக்கான யூனிட் ஆட்கள் சுற்றி இருக்கின்றனர். அவர்கள் நீங்கள் பேசுவதை திட்டுவதை பார்த்தால் என்ன நினைப்பார்கள். ஷூட்டிங் பார்க்க வரும் மக்கள் என்ன நினைப்பார்கள். அப்படி எல்லாம் செய்யாதீர்கள். எதாவது சொல்ல வேண்டி இருந்தால் தனியாக அழைத்து மெதுவாக இப்படி சொல்லுங்கள் என்றார். எனக்கு இந்த இங்கிதத்தையே பிரபுதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாா் என நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் கூறியிருக்கிறார்.





