தமிழ் சினிமாவில் நல்ல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. அவரது நடிப்பில் நடிகர் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றன. பேரரசு அவர் இயக்கிய படங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர்களை டைட்டில்களாக வைப்பது அவரது ஸ்பெஷலாகும்.
அந்த வகையில் தர்மபுரி சிவகாசி திருப்பாச்சி திருத்தணி திருவண்ணாமலை என்று அவர் இயக்கிய படங்களின் டைட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது படங்களில் சில காட்சிகளில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் தமிழ் சினிமா விழாக்களில் பங்கேற்கும் அவர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் ரெட் லேபிள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது, ஒரு காலத்தில் கதாசிரியருக்கு முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. கதையை வைத்துக்கொண்டு பிறகுதான் கதாநாயகர்களை தேடுவார்கள். இப்போது கதை என்ன என்பதை விட கதாநாயகன் யார் என்கிற காலம் வந்துவிட்டது.
கதாநாயகன் கதையை முடிவு செய்யும் படி ஆனது இப்போது கதையை தயாரிப்பாளர் முடிவு செய்வதில்லை கதாநாயகன் தான் முடிவு செய்கிறார்.இந்த படத்தில் பாடிய பாடகி சின்மயி ஏன் இந்த விழாவுக்கு வரவில்லை? இயக்குனர் யார் என்று தெரிந்துதான் பாட்டு பாடினாரா? சின்மயி ஒரு படத்தில் பாடிவிட்டு அந்த படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொள்கிறார். தெரியாமல் பாடிவிட்டேன் என்று வருத்தம் தெரிவிக்கிறார்.
ஒரு படத்தில் பாடும்போது என்ன சூழல், என்ன வரிகள் என்பதை தெரிந்து கொண்டுதான் பாட வேண்டும். எல்லாம் பாடி முடித்த பிறகு வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குனர் தான். இயக்குனர் யார் என்று தெரியவில்லை என்று சொல்வதெல்லாம் தவறாகும்.
இப்படிச் சொல்வது அந்த இயக்குனருக்கு மட்டும் அவமானம் அல்ல. ஒவ்வொரு இயக்குனருக்கும் அவமானம். அதற்காக சின்மயி தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசியிருக்கிறார். பாடகி சின்மயி ஏற்கனவே கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டு கூறி சர்ச்சையை கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.





