- Advertisement -
Homeபொழுதுபோக்குகூத்தாடிகள் என்றால் இழிவா? விஜய் கூத்தாடி என்றால் அரசியலில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் மட்டும் கூத்தாடி...

கூத்தாடிகள் என்றால் இழிவா? விஜய் கூத்தாடி என்றால் அரசியலில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள் மட்டும் கூத்தாடி இல்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்!

- Advertisement -

எம்ஜிஆர் ஜெயலலிதா விஜயகாந்த் ஆகியோரை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி, தமிழக அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். கமல்ஹாசன், சரத்குமார், கருணாஸ், சீமான், மன்சூர் அலிகான், டி ராஜேந்தர், கே பாக்யராஜ், கார்த்திக் என பலரும் அரசியல் களத்தில் இருப்பவர்கள்தான். ஆனால் விஜய் அளவுக்கு மக்களிடம் அவர்களுக்கு ரீச் இல்லை.

ஆனால் எம்ஜிஆர் விஜயகாந்த் அரசியல் வருகைக்கு பிறகு மக்கள் மத்தியில் எழுச்சியான வரவேற்பு, நடிகர் விஜய்க்கு கிடைத்துள்ளது. விக்கிரவாண்டியில் அவர் நடத்திய கட்சியின் முதல் அரசியல் மாநாட்டுக்கு கிடைத்த வரவேற்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் விஜயின் வருகை, பல திருப்பங்களை ஏற்படுத்தலாம்.

- Advertisement -

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. சமீபத்தில் நடந்த எக்ஸ்ட்ரீம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது, உலகத்திலேயே மிக உயர்ந்த சாதனம் சினிமா. அது மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்கிறது. ஒரு ஆன்மீகவாதியோ அரசியல்வாதியோ நல்லதை பேசவில்லை. அனைத்து நல்ல விஷயங்களை சினிமா தான் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அரசியல்வாதிகள் குடிக்க கூடாது, சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதில்லை. எல்லா மதமும் சம்மதம் என்று கூறும் நிறைய படங்கள் வருகிறது. இதை அரசியல்வாதிகள் சொல்வதில்லை. அரசியல்வாதிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் சொல்ல வேண்டியதை எல்லாம் இன்றைக்கு சினிமா சொல்லி வருகிறது. ஆனால் சினிமாக்காரர்களை கூத்தாடி என்கிறார்கள். அரசியல்வாதிகள் மாற்றி மாற்றி ஊழல் பற்றி பேசுகிறார்கள். நல்ல விஷயங்களை அவர்கள் பேசுவதில்லை.

- Advertisement -

உலகத்தில் நல்ல விஷயங்களை சொல்வதே சினிமாதான். சினிமா மாதிரி உயர்ந்தது உலகத்தில் எதுவும் இல்லை. அரசியல்வாதிகள் குடும்பத்தில் இருந்து வந்து சினிமாவில் நடிப்பார்கள். அதை சினிமாக்காரர்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு போனால் கூத்தாடி ஏன் வருகிறார் என்கிறார்கள். உங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

கூத்தாடி என்று சொல்வதை காலம் காலமாக கேட்டு வருகிறோம். கருணாநிதியும் கூத்தாடிதான் அவரும் நாடகத்தில் பெண் வேடம் போட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கூத்தாடிகள்தான் என்று பெருமையாக சொல்வோம். விஜயகாந்த் கூத்தாடிதான். இன்றைக்கு விஜய் வந்துள்ளார். அவரையும் கூத்தாடி என்கிறார்கள். அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதை பெருமையாகத்தான் நாங்கள் நினைப்போம். கூத்தாடி என்பது பெருமையான வார்த்தை. அதை இழிவாக சொல்லாதீர்கள். கூத்தாடுவது ஒரு தொழில்; சாதியை இழிவு படுத்தி பேசுவது எவ்வளவு பெரிய தவறோ அதை போல் கூத்தாடி என்று இழிவாக சொல்வதும் தவறு என்று இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்