தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. குறிப்பாக நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி சிவகாசி என்ற 2 படங்களும் விஜய்க்கும் மாஸ் ஹிட் ஆக்சன் படங்களாக இருந்தன. அதே போல் இயக்குனர் பேரரசுக்கும் இந்த படங்கள் அதிரடி ஆக்சன் இயக்குனர் என்ற பெயரை பெற்றுத் தந்தன.
இயக்குனர் பேரரசுவின் ஸ்பெஷல், அவர் தனது படங்களின் டைட்டிலாக ஊர் பெயர்களை தான் வைத்திருக்கிறார். குறிப்பாக திருப்பதி திருவண்ணாமலை தர்மபுரி பழனி என அவர் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை தனது படங்களுக்கு டைட்டிலாக வைத்தவர். அதனாலேே அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இயக்குனர் மாணிக் ஜெய் இயக்கத்தில் உருவான படம் கைமேரா. இந்த படத்தில் கதாநாயகனாக எத்திஷ் காரைக்குடி கிருஷ்ணன் ரஞ்சித் குமார் சௌமியா கிருஷ்ணா நந்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார் பேரரசு மீரா கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கைமேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா தமிழில் பேசுவதா என குழப்பத்தில் இருக்கிறார். கன்னடத்தில் பேசினால் தப்பாக போய்விடுமோ என அவர் இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழ் மண்ணில் மொழிக்கும் கலைக்கும் சம்பந்தமில்லை.
மேலும் நிறைய இடங்களில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது. சினிமாக்காரங்க உஷாராக இருக்க வேண்டும். எத்தனையோ பேர் தண்ணி அடிச்சுட்டு கூத்தடிக்கிறான். அநியாயம் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் சினிமாக்காரன் யாராவது தண்ணி அடிச்சுட்டான்னு தெரிந்தால் அன்னிக்கு அது தான் தேசிய பிரச்சினையாகி விடுகிறது.
போதை கலாச்சாரம் என்பது தவறுதான். நடிகர் போதைப் பொருள் விவகாரத்தில் கைதானால் தீவிரவாதி போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அதனால் சினிமாக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும். சின்ன தவறு செய்தாலும் தேசத் துரோகம் போல காட்டி விடுகிறார்கள் என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





