- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்போதுமே அதை நம்பி படம் எடுங்கள், அவர்களை நம்பி படம் எடுக்காதீர்கள்… - விஜய் பட...

எப்போதுமே அதை நம்பி படம் எடுங்கள், அவர்களை நம்பி படம் எடுக்காதீர்கள்… – விஜய் பட இயக்குனர் பேரரசு வைத்த பகிரங்க கோரிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. எனினும் விஜய் நடிப்பில் பேரரசு இயக்கிய சிவகாசி திருப்பாச்சி ஆகிய 2 படங்களும் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. இது இயக்குனர் பேரரசுக்கு மட்டுமின்றி நடிகர் விஜய்க்கும் இந்த 2 படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.

இயக்குனர் பேரரசு பெரும்பாலும் தனது படங்களின் டைட்டிலை ஊர்களின் பெயர்களாக தான் வைப்பார். இது அவரது ராசி என்று கூட கோலிவுட்டில் கூறப்படுகிறது. அவர் இயக்கிய படங்களுக்கு தர்மபுரி திருவண்ணாமலை பழனி திருத்தணி திருப்பாச்சி சிவகாசி என்றே பெயர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் அகமொழி விழிகள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது, அகமொழி விழிகள் என்ற பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்து படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது.

நான் சிவகாசி படம் எடுத்த போது அந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச ரொம்பவும் கஷ்டப்பட்டேன். இப்போதுதான் புரிகிறது. நான் எழுதி வைத்து படித்திருக்கலாம்.

- Advertisement -

தமிழ் சினிமா அழிந்து வருவதாக சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என நிர்ணயிக்கும் போது பாப்கானும் இந்த விலைக்கு தான் விற்க வேண்டும் என அரசு நிர்ணயிக்க வேண்டும். இதை ஏன் அரசாங்கம் செய்யக்கூடாது, மக்களுக்காக தானே அரசாங்கம் இருக்கிறது.

எப்போதுமே கதையை நம்பி படம் எடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், என் தம்பி மியூசிக் போட வேண்டும் என்று படம் எடுக்காதீர்கள். அப்படி படம் எடுத்தால் அது ஓடாது என்று இயக்குனர் பேரரசு அந்த விழாவில் பேசியிருக்கிறார். அகமொழி விழிகள் என்ற என்ற இந்த படம் வரும் மே மாதம் 9ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்