- Advertisement -
Homeபொழுதுபோக்குஜல்லிக்கட்டு காளையுடன் ஸ்ரீ திவ்யா... அடக்கமாக வந்து போகும் கார்த்தி... என்ன சொல்ல வருகிறார் மெய்யழகன்......

ஜல்லிக்கட்டு காளையுடன் ஸ்ரீ திவ்யா… அடக்கமாக வந்து போகும் கார்த்தி… என்ன சொல்ல வருகிறார் மெய்யழகன்… புதிய தகவல்களை பகிர்ந்த இயக்குனர் பிரேம்குமார்…

- Advertisement -

இங்கு காதல் திரைப்படங்களை நாம் பட்டியலிட்டால், அதில் பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான திரைப்படமாக 96 படம் இருக்கும். வயது எவ்வளவு சென்றாலும் தனது முன்னாள் காதலியையே மனதில் நினைத்துக் கொண்டு திருமணம் செய்யாமல் இருக்கும் ஆணின் ஒரு பக்கத்தையும், இவர்கள் மீண்டும் சந்தித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் மிகவும் அழகாக கூறி இருந்தார் இயக்குனர் பிரேம்குமார்.

 

- Advertisement -

பள்ளிப் பருவத்தில் அனைவருக்கும் உண்டான காதலை, எந்த ஒரு இயக்குனரும் இந்த அளவு நேர்த்தியாக காட்சிப்படுத்திருக்க முடியாது என்று தான் கூற வேண்டும். இப்படி அந்த திரைப்படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார் பிரேம்குமார். அதிலும் கோவிந்த் வசந்தாவின் இசைரசிகர்களை கட்டி போட்டது என்றே கூறலாம்.

 

- Advertisement -

96 திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் மிக இயல்பான நடிப்பு. எந்த ஒரு காட்சியிலும் எல்லை மீறி நடிப்பை வெளிப்படுத்தாமல் அந்த காதலை மனதுக்குள் வைத்துக் கொண்டே அவர்கள் காட்டிய ஒவ்வொரு முகபாவனையும் படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.

 

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த காதல் படங்களில் 96க்கு நாம் 100 மதிப்பெண்கள் கொடுக்கலாம். இந்தப் படத்தின் இயக்குனரான பிரேம்குமார், சிறிது இடைவேளை விட்டு தற்போது மெய்யழகன் என்னும் படத்தை எடுத்திருக்கிறார். கார்த்தி தான் இந்த படத்தின் ஹீரோ. தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

 

இதில் அரவிந்த்சாமி ஸ்ரீதிவ்யா ராஜ்கிரன் சுவாதி கொண்டே தேவதர்ஷினி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி மெய்யழகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படியான சூழலில் படம் குறித்த பல்வேறு தகவல்களை பிரேம்குமார் நமக்கு விவரித்து இருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் பேசியதாவது, அன்பு… அன்பு ஒன்றே இந்த திரைப்படத்தின் வெளிப்பாடாக இருக்கும். 96 திரைப்படமும் ஒரு வகையில் அன்பை வெளி காட்டிய திரைப்படம் தான். அதில் எந்தவித ரொமான்ஸும் இருக்காது. இதுவும் அப்படிதான். 96 திரைப்படம் எப்படி முதல் புள்ளியோ… மெய்யழகனை அதற்கு அடுத்த இரண்டாம் புள்ளி என்று கூறலாம். இரண்டு பேருக்கான உரையாடல் தான் இந்த படத்திலும் இருக்கும். நிச்சயம் இந்த படத்தை பார்த்துவிட்டு, நாம் பேசாமல் இருந்தவர்களிடமும் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்