பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதையாக, தேவையில்லாமல் விஜய் நடித்த தி கோட் படத்தில் அஜீத்குமாரை கொண்டு வந்து, தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி இருக்கிறது தி கோட் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம். இதில் வெங்கட்பிரபுவுக்கும் திட்டு கிடைத்து வருகிறது. அவரையும் அஜீத் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது விஜய் படத்தில் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தின் தீம் மியூசிக்கை ஒலிக்க விட்டது மட்டுமின்றி, அந்த இடத்தில் தல பெயரையும் சொல்ல வைத்து, அஜீத் ரசிகர்களுக்கு மாஸ் காட்டியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. இதை அஜீத்குமார் ரசிகர்களே வரவேற்று பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் ஒருவர், தி கோட் படத்தில் வரும் அஜீத்குமார் காட்சி குறித்து ஏதோ கிண்டலடித்து பதிவிட அந்த பதிவை படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட் நிறுவனமே அந்த டிவீட்டை லைக் செய்திருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. இதனால் பட தயாரிப்பு நிறுவனத்தையும், வெங்கட்பிரபுவையும் அஜீத்குமார் ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.
இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் தி கோட் படத்தின் கிளைமாக்ஸில் மகன் விஜயிடம், சிக்கிக்கொள்ளும் தன் மகள் ஜீவிதாவிடம் அவரது அப்பா விஜய், நீ யாருடைய பேன்மா என்று கேட்கிறார். சொல்லு நீ யாருடைய பேன் என்று மீண்டும் கேட்க, அவர் தல பேன் என்று கூறுகிறார்.
அப்போது பின்னணியில் மங்காத்தா தீம் மியூசிக் ஒலிக்கிறது. அந்த நேரத்தில் தன் தலையை பின்னால் ஓங்கி விஜய் முகத்தில் அடித்து, அந்த பெண் அவரது பிடியில் இருந்து தப்பிக்கிறார். அந்த நேரத்தில் தியேட்டரில் ஆரவாரமும், விசிலும், கைதட்டலும், கூச்சலும் பறக்கிறது. தல என்றால் அது அஜீத்குமார் என்று தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் கிரிக்கெட் உலகில், கிரிக்கெட் ரசிகர்களும் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியை தல என்றுதான் அழைக்கின்றனர். கிரிக்கெட் ரசிகையான விஜய் மகள் தல பேன் என்ற சொல்வது அஜீத்குமாரையா, தோனியையா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜீவிதா, நான் தோனி ரசிகை என்பதை தான் அப்படி சொன்னேன் என்ற தொனியில் பேசி குழப்பி விட்டிருக்கிறார். அந்த பேட்டி வைரலாகி, மேலும் அஜீத்குமார் ரசிகர்களை ஆத்திரமடைய செய்திருக்கிறது.





