- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆர் கொண்டு வந்த அந்த திட்டம், பின்னால் காரணமாக இருந்தது அவர்தான் - இயக்குனர் ஆர்...

எம்ஜிஆர் கொண்டு வந்த அந்த திட்டம், பின்னால் காரணமாக இருந்தது அவர்தான் – இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் சொன்ன சம்பவம்!

- Advertisement -

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தொழிலில் எவ்வளவு அவசியமானதோ அதே போல் மாணவர்களின் கல்வி நலனினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கல்வி கற்ற சமுதாயம்தான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்ற முடியும் என்பதை அன்றைய ஆட்சியாளர்கள் அதிக கவனத்தில் வைத்திருந்தனர். அதனால் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார்கள்.

அந்த வகையில் அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜர் தமிழ்நாடு முழுவதும் பல நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களை கட்டி மாணவர்களுக்கு கல்வி அறிவு வழங்கினார். அதனால் தான் கல்வி கண் திறந்த காமராஜர் என்று இப்போதும் அவரை போற்று புகழ்ந்து வருகிறோம்.

- Advertisement -

அத்துடன் பசியுடன் இருக்கும் பிள்ளைகள் வகுப்பறையில் படிக்க முடியாமல் சிரமப்படக் கூடாது என்பதால் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் காமராஜர் கொண்டு வந்தார். அவரது ஆட்சி காலத்தில் கல்விக்கு பெரிய முக்கியத்துவம் இருந்தது. அதே போல் காமராஜர் வழி வந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் அவர் முதல்வராக இருந்த போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, பள்ளியில் படிக்கும் அனைவரும் எட்டாம் வகுப்பு வரை எல்லாரும் பாஸ் என்று எம்ஜிஆர் திட்டம் கொண்டு வந்தார். ஒருமுறை அவரை நேரில் பார்க்க சென்ற போது அந்தத் திட்டம் சூப்பர்ன்னு சொன்னதும் அது நான் எடுத்த முடிவு அல்ல, பெரியார் எடுத்த முடிவு என்று எம்ஜிஆர் என்னிடம் சொன்னார்.

- Advertisement -

எப்படி என்று நான் கேட்டதும், பெரியார் இருந்த போது ஒரு செருப்பு தைக்கிறவர் பையன் 53 மார்க் வாங்கி இருக்கான். இன்னொரு ஐயர் பையன் 97 மார்க் வாங்கியிருக்கான். அந்த ரெண்டு பேர்ல 53 மார்க் வாங்குன பையனுக்கு தான் டாக்டர் சீட் கொடுக்கணும்ன்னு பெரியார் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அப்போது அங்கு கலெக்டர் வந்து எப்படி 53 மார்க் வாங்கியவனுக்கு டாக்டர் சீட் கொடுக்க முடியும்? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பெரியார், ஐயர் பையன் 97 மார்க் வாங்கி இருக்கானா அவங்க வீட்டுல எல்லாரும் படிச்சவங்க. ஆனா பரம்பரையிலேயே படிக்காத ஒருத்தன் 53 மார்க் வாங்கி இருக்கான். அதனால அவன் படித்தால் தான் ஜாதி மதம் எல்லாம் ஒழிய காரணமாய் இருக்கும்ன்னு பெரியார் சொன்னார் என்று தன்னிடம் எம்ஜிஆர் சொன்னதாக ஆர் சுந்தர்ராஜன் அந்த அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். காமராஜர் எம்ஜிஆரை போல பெரியாரும் சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதில் அதிக கவனம் கொண்டிருந்ததை இந்த சம்பவம் உறுதிப்படுத்துக்கிறது.

- Advertisement -

சற்று முன்