தமிழ் சினிமாவில் நீ வருவாய் என என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜகுமாரன். அடுத்து அவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் மற்றும் காதலுடன் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் நீ வருவாய் என படம் மட்டுமே வெற்றிப் படமாக இருந்தது. மற்ற 3 படங்களும் படுதோல்வி படங்களாக இருந்தன.
இந்நிலையில் இயக்குனர் ராஜகுமாரனை நடிகை தேவயானி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தேவயானி பிரபல முன்னணி நடிகையாக இருந்தும், ஒரு படம் மட்டுமே ஹிட் கொடுத்த இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
தேவயானியின் தமிழ் சினிமாவில் இமேஜ் உச்சத்தில் இருந்த போது அவர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இருவரது உருவ ஒற்றுமை குறித்தும் பலர் அப்போது விமர்சித்தனர். எனினும் இந்த தம்பதி நல்ல ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். தனது பெற்றோர் எதிர்ப்பை மீறிதான் ராஜகுமாரனை தேவயானி கரம்பித்தார். தேவயானிதான் தம்பி நடிகர் நகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, தேவயானியிடம் இவரை எப்படி கல்யாணம் பண்ணினீங்கன்னு மட்டும் கேக்குறீங்களே? ஆனா தேவயானியை ஒரு ராணியாகவே வெச்சிருக்க நான் எவ்வளவு இழந்திருப்பேன். அதை ஏன் யாருமே யோசிக்க மாட்டேங்கிறீங்க?
நான் ஒரு இடத்துக்கு வாய்ப்பு கேட்பதற்காக கதை சொல்ல போய் இருப்பேன். என்னடா தேவயானி புருஷன் தினமும் வர்ராருன்னு அங்க இருக்கறவங்க சொல்லிடுவாங்களோன்னு நான் அங்க போய் இருக்க மாட்டேன். விஜய் அஜீத் எனக்கு நல்ல நண்பர்கள்தான். ஆனால் அவர்களை போய் பார்த்தால் தேவயானி கணவர் வந்துட்டு கெஞ்சிகிட்டு இருக்காருன்னு சொல்லுவாங்கன்னு யோசிச்சு அதெல்லாம் விட்டு இருக்கேன்.
இப்படி தேவயானிக்காக நான் நிறைய இழந்திருக்கேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் ஆதங்கமாக கூறியிருக்கிறார். சூரியவம்சம் தேவயானி கிடைக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆண்கள் பலரும் ஆசைப்பட்டனர். இப்போது அந்த தேவயானியே மனைவியாக வாய்த்தும் இப்படி அவரை பற்றி தவறாக ராஜகுமாரன் விமர்சனம் செய்துக்கொண்டு இருக்கிறாரே? இது சரிதானா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





