நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரமுகியில் நடித்த வெகு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். அந்த சமயத்தில் வல்லவன் படத்தில் சிம்புவுடன் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் பாதியிலேயே முடிந்தது. அந்த விவகாரத்தில் நயன்தாராவை தனிப்பட்ட முறையில் பலரும் தாக்கி பேசினர். இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாதவர் தன்னுடைய கரியரில் கவனம் செலுத்திட்டான்
சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார். அந்த காதலும் பாதியில் முடிவடைய விரக்தியின் உச்சத்திற்கு சென்றார் அவர். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்குவ் அந்தார்.
அதன்படி அவர் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியும் இருந்தார். அதன் பிறகு நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அப்போது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர் தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் இறைவன் படம், நயன்தாராவின் 75வது படம் ஆகிய படங்களிலும் கமிட்டாகி இருக்கிறார். இந்தச் சூழலில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு அவரை சம்மதிக்க வைத்தது எப்படி என்று தெரியவந்திருக்கிறது.
இயக்குநர் ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் கதையை ஆர்யாவிடம் சொன்னேன்.கதையை கேட்ட பிறகு ஹீரோயினாக நயனை நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தார். ஆனால் அந்த சமயத்தில்தான் சினிமாவிலிருந்து ஒதுங்க அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தன.
எனவே எப்படி பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. இதனை புரிந்துகொண்ட ஆர்யா அவரே நயனிடம் ஃபோன் செய்து பேசினார். ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பல முறை பேசி பல விதங்களில் அவரை கன்வின்ஸ் செய்தார். அதன் பிறகுதான் பாஸ் என்கிற பாஸ்கரனில் நடிப்பதற்கு நயன்தாரா ஒத்துக்கொண்டார்” என்றார். ராஜேஷ்.





